/tamil-ie/media/media_files/uploads/2019/05/D668X0MVsAUpBCd.jpg)
Redmi Note 7S, Honor 20 Pro, Oppo K3 smartphones
Redmi Note 7S, Honor 20 Pro, Oppo K3 smartphones : ரெட்மீ, ஹானர், மற்றும் ஓப்போ நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் வெளியிட உள்ளனர். இதனால் எந்த போனை வாங்குவது என்ற குழப்பத்தில் தவித்து வருகின்றனர் வாடிக்கையாளர்கள்.
ரெட்மோ நோட் 7S (Redmi Note 7S)
இந்தியாவில் ரெட்மீ நோட் 7க்கு கிடைத்த அமோக வரவேற்பினைத் தொடர்ந்து வெளியாகும் அதன் சீரியஸ் இதுவாகும். 48 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ள இரண்டாவது சியோமி போனும் இது என்பது குறிப்பிடத்தக்கது. மே 20ம் தேதி இந்த போன் வெளியாக உள்ளது. வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட் மற்றும் MI இந்தியாவில் இந்த போன்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ப்ரோ (Honor 20 and Honor 20 Pro)
இந்த இரண்டு போன்களும் லண்டனில் வெளியாக உள்ளது. 21ம் தேதி இந்த போனின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஹானர் 20 ஸ்மார்ட்போன் மூன்று பின்பக்க கேமராக்களுடன் வெளியாக, ஹானர் 20 ப்ரோ நான்கு பின்பக்க கேமராக்களுடன் வெளியாகிறது. இந்த போனின் டீசரை சமீபத்தில் வெளியிட்டு அசத்தியது இந்நிறுவனம்.
ஓப்போ கே3 ஸ்மார்ட்போன் (Oppo K3)
சீனாவில் வருகின்ற 23ம் தேதி வெளியாக உள்ளது இந்த போன். 16 எம்.பி. பாப் செல்ஃபி கேமரா, ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசர், 6.5 இன்ச் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை, மற்றும் இன் - டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். இரட்டை பின்பக்க கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்த்க்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.