ஜியோவின் ஹேப்பி நியூ இயர் 2020 : புத்தாண்டு சிறப்பு சலுகைனா இது தான் பாஸ்!

Jio Happy New Year Offer 2020 : மேலும் மொத்தமாக ஒரு வருடத்திற்கு 547.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம்.

jio prepaid plans, jio offers, Reliance Jio 2020 Offer unlimited voice calls, 1.5GB data, Jio Apps benefits, validity,
jio prepaid plans, jio offers

 Reliance Jio 2020 Offer Benefits, Validity : ஒவ்வொரு வருட கடைசியிலும் ஜியோ நிறுவனம் ஹேப்பி நியூ இயர் என்ற திட்டத்தின் கீழ் புதிய ப்ளான்களை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது ஜியோ நிறுவனம். தற்போது 2020ம் ஆண்டின் துவக்கத்தை மனதில் கொண்டு 2020 ஹேப்பி நியூ இயர் திட்டத்தை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ரூபாய் 2020-க்கான சலுகைகளை பெற்றுக் கொள்ள இயலும்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்…

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இலவச, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களை பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் 1.5ஜிபி டேட்டாவையும் பெற்றுக் கொள்ள இயலும். ஜியோ திட்டங்களானஜியோ சினிமா, மைஜியோ ஆப் போன்ற செயலிகளை பெறுவதற்கு இலவச அக்சஸையும் ஜியோ நிறுவனம் வழங்கும். இதன் வேலிடிட்டி 365 நாட்களாலும். இது ஜியோ ரீசார்ஜீற்கு மட்டும் தான்.

ஜியோ போன்களுக்கான சிறப்பு தள்ளுபடிகளையும் வழங்கியுள்ளது இந்நிறுவனம். அவர்களும் ரூ.2020 மதிப்பிலான சிறப்பு தள்ளுபடிகளை பெற இயலும். இலவச அன்லிமிட்டட் வாய்ஸ் கால்கள், ஜியோ ஆப்களுக்கான அக்சஸ், இலவச எஸ்.எம்.எஸ்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 0.5ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 12 மாதங்களாகும்.

மேலும் படிக்க : இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம்… எப்போது துவங்கி எப்போது நிறைவடைகிறது?

ஜியோ ஹேப்பி நியூ இயர் திட்டம் என்பது ரூ.2199க்கு ஜியோ நிறுவனம் வழங்கிய வருடாந்திர திட்டம் ஆகும். அதே சலுகைகளை ஆனால் ரூ. 179 குறைவில் வருகின்ற ஆண்டிற்கான கொண்டாட்டமாக வழங்க உள்ளது. மொத்தமாக இந்த திட்டத்தின் கீழ் 12,000 இலவச நிமிடங்கள் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்கிடம் பேசிக் கொள்ள இயலும். அதே நேரத்தில் 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் ஒரே நாளில் அனுப்ப இயலும். மேலும் மொத்தமாக ஒரு வருடத்திற்கு 547.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jio 2020 offer unlimited voice calls 1 5gb data jio apps benefits validity

Next Story
கிரகண நேரம் எது? வெற்றுக் கண்களால் பார்க்கலாமா?Solar Eclipse 2019 Date, Timings, solar eclipse, solar eclipse 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com