Reliance Jio AGM : ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் ஜியோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டு விழாவாகும். இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் ஜியோ செய்திருக்கும் சாதனைகள் குறித்து கடந்தவாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி 32.29 கோடி சந்ததாரர்கள் இந்தியாவில் ஜியோவை பயன்படுத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளது.
Reliance Jio AGM - நிகழ்வில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு விழாவில் அறிவித்த திட்டத்தினை இம்முறை செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஒரே இணைப்பில் இணைய சேவை, டிவிக்கான கேபிள், மற்றும் அழைபேசி அழைப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஜியோ ஜிகாஃபைபர் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஆண்டு அந்த ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Preview Jio GigaFiber offer - இந்தியா முழுவதும் 1,400 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த டிவைஸை இன்ஸ்டால் செய்வது துவங்கி செக்யூரிட்டி டெபாசிட் வரையில் அனைத்திற்கும் முன்பணமாக ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. இலவசமாக 90 நாட்களுக்கு 100Mbps இணைய சேவை வழங்கப்படுகிறது. இது அனைத்தும் ப்ரிவியூவிற்கு மட்டுமே. முறையான கமர்சியல் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 வரைக்கும் காத்திருக்க வேண்டும் தான் நாம் அனைவரும்.
மேலும் படிக்க : இந்தியர்களின் ஃபேவரைட் கார் இது தான்... டாட்டா நெக்ஸான் ஒரு பார்வை