Reliance Jio All-In-One Prepaid Plans features : ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ஆல் - இன் - ஒன் என்ற ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. ரூ. 222, ரூ. 333, ரூ. 444, ரூ. 555 என்று நான்கு புதிய ப்ரீபெய்ட் ப்ளான்கள் அறிமுகமாகியுள்ளது. ஜியோவில் இருந்து இதர ஜியோ போன்களுக்கு அன்லிமிட்டட் டாக் டைம் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து இதர நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வரை தரும் இந்த ப்ளான்கள் மூலம் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.
ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்குகளுக்கு பேச ஐ.யூ.சி சார்ஜ் என்ற கட்டணத்தை ட்ராய் நிறுவனம் கட்டாயப்படுத்தியது. மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதிகமாக ஜியோ நிறுவனம் இந்த கட்டணத்தை செலுத்தியதால் அதற்கு ஈடான தொகையை வாடிக்கையாளர்களிடம் பெற முயற்சி செய்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப புதிய ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது ஜியோ நிறுவனம்.
மேலும் படிக்க : ஜியோ வெப்சைட்டுக்கு போங்க… தீபாவளி பரிசு காத்துட்டு இருக்கு!
வேலிடிட்டி
ரூ. 222 ப்ளானிற்கான வேலிடிட்டி 28 நாட்களாகும் (56 ஜிபி)
ரூ. 333 ப்ளானிற்கான வேலிடிட்டி 56 நாட்களாகும் (112 ஜிபி)
ரூ. 444 ப்ளானிற்கான வேலிடிட்டி 84 நாட்களாகும் (168 ஜிபி)
ரூ. 555 ப்ளானிற்கான வேலிடிட்டி 84 நாட்களாகும் (168 ஜிபி)