Reliance Jio hikes mobile tariff rates in coming weeks : ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தங்கள் டாரிஃபினை அடுத்த மாதம் முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தங்கள் டாரிஃப் உயர்வு குறித்து பேசியுள்ளது.
இது தொடர்பாக நேற்று (19/11/2019) ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “மற்ற ஆப்பரேட்டர்களைப் போலவே நாங்களும் அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்கி செயல்பட்டு வருகின்றோம். தற்போது ரெகுலேட்டரியின் புதிய திருத்தங்களுக்கு இணங்க அடுத்த சில வாரங்களில் டேரிஃப்களில் பெரிய மாற்றங்கள் உருவாகும் என்றும் ஆனால் அது டேட்டா பயன்பாட்டிலோ இதர டிஜிட்டல் அடாப்சனிலோ எவ்வித மாற்றத்தையும் உருவாக்காது” என்றும் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 69.83 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாகவும், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் 49 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் சுமார் 37.24 கோடி வாடிக்கையாளர்களையும், ஜியோ நிறுவனம் 35.52 கோடி வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 32.55 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க : இந்தியாவில் என்ன விலைக்கு விற்பனையாகலாம் எக்ஸ்2 ப்ரோ? எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!