Reliance Jio : முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரைச் சொல்லி இந்தியாவின் அதிகமான வாடிக்கையாளர்களை சம்பாதித்த ஒரு நிறுவனமாக மாறிவிட்டது. குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை தரும் நிறுவனமாக அது மாறியிருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்தே இருக்காது.
2021ம் ஆண்டு, அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்காக ஜியோ மாறும் என்ற கருத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் சான்ஃபோர்ட் சி பெர்ன்ஸ்டெய்ன், க்ரிஸ் லேன் மற்றும் சாமுவேல் சென் ஆகியோர் அடங்கிய குழு கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இன்று வெளியான இந்த கருத்துக் கணிப்பில் ஏர்டெல், வோடஃபோன், மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டி போடுவடுதில் பின்வாங்கி வருகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஏன் (Reliance Jio) ஜியோ நிறுவனம் ?
- ஒரு வருடம் முழுமையாக இலவச கால்கள் என்ற அறிமுகச் சலுகையுடன் வெளியானது தான் ரிலையன்ஸின் புதிய சேவையான ஜியோ.
- சீனாவிற்கு அடுத்த படியாக மிகப் பெரிய நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றியதில் மகத்தான பங்கினை வகிக்கிறது ஜியோ.
- 4ஜி சேவையை அறிமுகப்படுத்திய பின்பு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து டேட்டாவிற்காக கட்டணங்களை வசூல் செய்யத் தொடங்கியது இந்நிறுவனம்.
- கிட்டத்தட்ட 227 மில்லியன் வாடிக்கையாளர்களை தற்போது கொண்டிருக்கிறது ஜியோ. இந்தியாவின் மூலை முடுக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்த ஒரு நிறுவனமாக வளர்ந்தது ஜியோ,
- இந்த அதி தீவிர வளர்ச்சியானது நெட்வொர்க் இண்டஸ்ட்ரீயில் வளர்ந்து வந்த சிறு சிறு நிறுவனங்கள் அனைத்தையும் காலி செய்துவிட்டு மிகப் பெரிய பெயருடன் உருவானது ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய சேவையான ஜியோ.
- தற்போது வரை ஏர்டெல் நிறுவனம் தான் இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் சேவையை வழங்கி வரும் நிறுவனம் ஆகும்.
ஏர்டெல்லின் இடத்தை பிடிக்குமா Reliance Jio ?
சிறந்த நெட்வொர்க் சேவைகளை வழங்கி வரும் ஏர்டெல்லின் இடத்தினை பிடிப்பது தான் ஜியோவின் நோக்கம். 2021ம் ஆண்டிற்குள் அதற்கான இடத்தினை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இறங்கியுள்ளது ஜியோ நிறுவனம்.
இந்த முதல் இடத்தினை அடையும் வரையில் ஜியோ தங்களின் செல்போன்களான ஜியோ போன்கள், 4ஜி போன்கள் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்த வண்ணமே இருக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க : வருடம் முழுவதும் இலவச இண்டெர்நெட் டெலிபோனிக் சேவையை வழங்கும் பி.எஸ்.என். எல்