Reliance Jio prime membership auto renewal : 2016ம் ஆண்டு இந்தியாவின் நெட்வொர்க்கிங் சேவையில் அதிரடி காட்டியது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம். 4ஜி டேட்டா மற்றும் அழைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து ஏர்டெல், பி.எஸ்.என்.எல், ஐடியா, வோடாஃபோன் போன்ற நிறுவனங்களை திக்குமுக்காட வைத்தது இந்நிறுவனம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் மெம்பராக 90 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சாவ்ன், ஜியோ க்ளௌட் போன்ற எண்ணற்ற அப்ளிகேசன்களை சிறந்த முறையில் இலவசமாக அளித்திட வழிவகை செய்யும் திட்டம் இதுவாகும்.
தற்போது ப்ரைம் வாடிக்கையாளர்களின் ப்ரைம் மெம்பர்ஷிப்பை ஆட்டோமேட்டிக்காக ரி-நியூ செய்து வருகிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக.
Reliance Jio prime membership auto renewal - எப்படி செக் செய்வது ?
மை ஜியோ ஆப்பினை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்...
அதன் இடப்புறத்தில் இருக்கும் ஆப்சன்களில் மை ப்ளான் என்ற ஆப்சன் உள்ளது. அதனை க்ளிக் செய்தால் உங்களின் அனைத்துவிதமான ஆட் ஆன் பேக்குகளும் இடம் பெற்றிருக்கும்.
அதில் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்பினை க்ளிக் செய்யுங்கள்
உங்களின் மெம்பர்ஷிப் ஏற்கனவே ரி-நீவல் செய்யப்பட்டிருந்தால், ஒரு வருடத்திற்கான ஃப்ரீ மெம்பர்ஷிப் தற்போது ரினீவல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்கு ஜியோப்ரைம் சலுகைகளை நீங்கள் தடையின்றி பெற்றிடலாம் என்ற பாப்-அப் செய்தி வெளியாகும்.
மேலும் படிக்க : ஜியோ வழங்கும் அன்லிமிட்டட் இண்டெர்நேசனல் ரோமிங் திட்டங்கள் என்னென்ன ?