Reliance Jio: கோவிட்-19 பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களால் அதிகரித்து வரும் பிராட் பேண்ட் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டத்தை ப்ரீபெய்ட் பயனாளர்களுக்காக நிறுவனம் அறிவித்துள்ளது. காலாண்டு திட்டமான இதில் ரூபாய் 999/- க்கு 84 நாட்களுக்கு தினமும் 3 GB டேட்டா வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1-GB அதிவேக டேட்டாவுக்கான விலை ரூபாய் 4/- ஐ விடக் குறைவாக வழங்கப்படுகிறது என நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தில் ஜியோ எண்ணிலிருந்து ஜியோ எண்ணுக்கு மற்றும் தரைவழி இணைப்புகளுக்கு அளவில்லா இலவச அழைப்புகள் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ எண்ணிலிருந்து இதர தொலைபேசி நிறுவன எண்களுக்கு 3,000 நிமிடங்கள் வரை இலவச அழைப்புகள் செய்யும் வசதி மற்றும் தினமும் 100 இலவச குறுஞ்செய்திகளும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அளவில்லா அதிவேக 3 GB டேட்டாவை வழங்குகிறது அதன் பின்னர் டேட்டா வேகம் 64 Kbps என குறைக்கப்படும். கூடுதலாக பயனர்களுக்கு JioAppsன் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்: விபரம் உள்ளே
ஊரடங்குக்கு பின்னர் அதிவேக டேட்டாவின் தேவை அதிகரித்துள்ளது. பலர் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கியுள்ளனர் மேலும் அதிக பொழுதுபோக்குகளையும் தேடுகிறார்கள். இந்த தேவையை கணக்கில் கொண்டு ஜியோ இந்த புதிய காலாண்டு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது என நிறுவனம் ஒரு அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.
முன்னர் ரூபாய் 2,399/- க்கு தினமும் 2 GB டேட்டா வழங்கும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வருடாந்திர திட்டத்தை அறிவித்தது. ஜியோ முன்பிருந்த ரூபாய் 2,121/- க்கு 336 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 GB டேட்டா வழங்கும் திட்டத்தையும் தொடர்ந்து வழங்குகிறது.
இதனுடன் ஒப்பிடக்கூடிய ஏர்டெலின் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டம் ரூபாய் 598/- மற்றும் ரூபாய் 698/- க்கு வருகின்றன. ஆனால் அவை முறையே 1.5 GB மற்றும் 2 GB என குறைவான டேட்டாவையே வழங்குகின்றன. ஐடியா (Idea) ரூபாய் 599/- க்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 GB டேட்டா, அளவில்லா இலவச அழைப்புகள் மற்றும் 100 குறுஞ்செய்திகளை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.