Reliance JioGigaFiber Price and Plans : ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் இணையம் - தொலைக்காட்சி - தொலைபேசி என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன.
இதற்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆக குறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
50Mbps வேகத்தில் செயல்படும் இணைய சேவையை பெற ரூ. 600 கட்டணமாகும் என்றும் 100Mbps வேகத்தில் இயங்கும் இணைய சேவையைப் பெற ரூ. 1000 கட்டணமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் வருடாந்திர ஜியோ மாநாட்டில் அதிகாரப்பூர்வ கட்டண அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100Mbps வேகம் கொண்ட Reliance JioGigaFiber இணைய சேவை
இந்த சேவையின் கீழ் 100 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அனைத்து ஜியோ ஆப்களும் முற்றிலுமாக இலவசம். டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் முன்பணம் செலுத்தி ப்ரிவியூ ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் ப்ரிவ்யூ சேவையை அறிமுகம் செய்தனர் ஜியோ. டிவி மற்றும் வாய்ஸ் சேவைகள் இன்னும் ப்ரிவ்யூ சேவைகளில் அறிமுகம் ஆகவில்லை.
Reliance JioGigaFiber price
50Mbps வேகம் கொண்ட சேவைக்கான கட்டணம் ஒரு மாதத்திற்கு ரூ. 600 ஆகும். 100Mbps வேகம் கொண்ட சேவைக்கான கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ. 1000 ஆகும். இந்த இரண்டு சேவைகளிலும் 100ஜிபி டேட்டா தான் லிமிட் ஆகும். கொடுக்கப்பட்ட டேட்டா முடிவுற்றால் மை ஜியோ ஆப் (JioApp) அல்லது Jio.com இணைய தளத்திற்கு சென்று 40 ஜிபி வரை டாப்-அப் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : பி.எஸ்.என்.எல் சூப்பர்ஸ்டார் 300 : ஹாட்ஸ்டார் சேவைகள் முற்றிலும் இலவசம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.