ஒரே நேரத்தில் 10 நண்பர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச வேண்டுமா ? ஜியோவின் புதிய ஆப்!

Reliance JioGroupTalk Mobile App Launched : க்ரூப் ம்யூட், ரீகனெட் கால் என சிறப்பு அம்சங்களையும் இந்த செயலி வழங்குகிறது.

By: Updated: February 22, 2019, 01:05:46 PM

Reliance JioGroupTalk Mobile App Launched : இரண்டு வருடங்களுக்கு மாஸாகா மக்களை வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் ஜியோ. குறைவான கட்டணம், நிறைய சலுகைகள், எக்கச்சக்க செயலிகள் என்று அனைவரையும் அசத்தியது ஜியோ. தற்போது, கான்ஃபிரன்ஸ் காலிற்காக புதியதாக செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

ரிலையன்ஸ் ஜியோக்ரூப் டாக் என்ற பெயரில் அந்த செயலி உருவாகியுள்ளது. அதனை எப்படி உபயோகம் செய்வது என்று விளக்குகிறது இந்த கட்டுரை.

Reliance JioGroupTalk Mobile App Launched – எப்படி பயன்படுத்துவது ?

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து முதலில் ஜியோ க்ரூப் டாக் செயலியை டவுன்லோடு செய்யவும்.

இதனை பயன்படுத்த உங்களின் ஜியோ எண்ணை அளிக்கவும்.பின்பு உங்களுக்கு ஒரு ஓ.டி.பி வரும். அதனை உள்ளீடாக கொடுத்து லாக் இன் செய்து இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆனால் தற்போது லிமிட்டட் எம்ப்ளாயி ட்ரயலில் இருக்கிறது. மிகவிரைவில் மற்றவர்களுக்கு இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜியோடாக் மூலமாக ஒரே நேரத்தில் 10 நபர்களுடன் கான்ஃபிரன்ஸ் கால் பேச இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நபர்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்யவும். பின்பு கால் செய்தால் ஒவ்வொருவராக அழைப்பில் இணைவார்கள்.

இந்த செயலி மூலமாக எச்.டி வாய்ஸ் காலும் பேசிக்கொள்ள இயலும்.

VoLTE நெட்வொர்க்குடன் கூடிய ஜியோ சிம் கார்டில், இண்டெர்நெட் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு அதன் பின்பு அழைக்கவும்.

க்ரூப் ம்யூட், ரீகனெட் கால் என சிறப்பு அம்சங்களையும் இந்த செயலி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ஏர்டெல் Vs வோடபோன் Vs ஜியோ : ரூ.100க்குள் சிறந்த டேட்டா டாப் அப் ப்ளான்கள் எது ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Reliance jiogrouptalk mobile app launched allows users to make group conference calls via volte

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X