Advertisment

ரெவால்ட் ஆர்.வி. 400 : ஆன் - போர்ட் சார்ஜருடன் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் பைக்... நடுவழியில் பேட்டரி தீர்ந்தாலும் இனி கவலை இல்லை

அமைதியாகவே இந்த பைக் ஓடும் என்று நினைக்க வேண்டாம்... பைக்கின் சத்தத்தை ஜெனரேட் செய்ய அப்ளிகேசன் தயாரித்து அசத்தியுள்ளது இந்த நிறுவனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Revolt RV400 Electric Bike Specifications, Price, Special Features, Launch Date

Revolt RV400 Electric Bike Specifications, Price, Special Features, Launch Date

Revolt RV400 Electric Bike Specifications, Price, Special Features, Launch Date :  ரிவால்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் பைக் வருகின்ற ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாக உள்ளது.  சமீபத்தில் அந்த பைக்கிற்கான அறிமுக விழா நடைபெற்றது.

Advertisment

இந்த பைக்கிற்கான முன்பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளது.  வெறும் ஆயிரம் ரூபாய் முன்பணம் கட்டி இந்த இரு சக்கர வாகனத்தை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள இருசக்கர வாகனங்களின் தொழில்நுட்பத்தினையே மாற்றும் சக்தியாக வருங்காலத்தில் இந்த பைக் இருக்கும் என்று பலரும் நம்பிக்க்கை தெரிவித்து வருகின்றனர்.

Revolt RV400 Electric Bike Specifications, Price, Special Features, Launch Date

Revolt RV400 Electric Bike Specifications, Price, Special Features, Launch Date

ஆன்போர்ட் சார்ஜருடன் வரும் Revolt RV400

எலெக்ரிக் பைக் ஓட்டுறவங்களுக்கான கஷ்டம் என்பது வெகு தூர பயணம், அருகில் குடிமக்களோ, நகரங்களோ, விடுதிகளோ இல்லாத சாலைகளில் எரிபொருள் பற்றாக்குறை மாதிரி தான் லோ பேட்டரி. அப்போது திகைத்து நிற்பது என்பதை சமாளிக்கவே 15ஏ பவர் சாக்கட்டுடன் கூடிய சார்ஜர் இந்த பைக்குடன் வெளியாகிறது. நான்கு மணி நேரத்தில் இது முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். எனவே எந்த கவலையும் இன்றி நீங்கள் ரைட் போகலாம்.

Revolt Mobile App

இந்த பைக்கில் 4ஜி எல்.டி.இ. சிம்கார்ட் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் இணைய சேவையை பயன்படுத்த இயலும். மேலும் இந்த பைக்கிற்காகவே புத்தம் புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பைக் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மேலும் நேவிகேஷன், லொக்கேட்டர், செக்யூரிட்டி, டோர்ஸ்டெப் பேட்டரி டெலிவரி என அனைத்தையும் அறிந்து கொள்ள இயலும்.

Revolt RV400 Electric Bike Specifications, Price, Special Features, Launch Date

Eco, City and Sport Mode

எக்கோ, சிட்டி, மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற மூன்று வித்தியாசமான ரைடிங் மோட்களை உங்களுக்கு அளிக்கிறது இந்த பைக். எக்கோ மோடில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கி.மீ வரை பயன்படுத்தலாம். சிட்டி மோடில் 80 முதல் 90 கி.மீ வரை பயணிக்கலாம். ஸ்போர்ட்ஸ் மோடில் நாம் எப்படி வண்டி ஓட்டுகின்றோம் மற்றும் எந்த விதமான சாலையில் ஓட்டுகின்றோம் என்பதைப் பொறுத்து கி.மீகள் வேறுபடும்.

Revolt Motors RV 400 Price

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை நிறுவிய முன்னாள் நிறுவனர் ராகுல் ஷர்மாவின் புதிய நிறுவனம் தான் ரெவோல்ட் மோட்டர்ஸ். இந்த பைக் குறித்து குறிப்பிடும் போது, இந்த இருசக்கர வாகனம் அனைவருக்குமானது. எனவே இதன் விலையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆறுதலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். எனவே இதன் விலை ஒரு லட்சத்திற்கும் குறைவாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரையில் விலைக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Synthesised sounds

என்ன இருந்தாலும் நாம் இரு சக்கர வாகனம் தான் ஓட்டுகின்றோம் என்பதை உறுதிப்படுத்துவது அந்த வண்டியின் சத்தம் தான். ஆனால் எலெக்ட்ரிக் பைக்கில் அதை நாம் எதிர்பார்க்க இயலாது. வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டங்களை புரிந்து கொண்ட நிறுவனம், இந்த மொபைல் ஆப் மூலமாக தேர்வு செய்யப்படும் ரிங் டோனை (சவுண்டை) பை ஓட்டும் போது நீங்கள் உணரலாம். இந்த ஐடியா தான் இந்த பைக்லயே ஹைலட்.

மேலும் படிக்க : 105 ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் ஜாவா பைக்குகள்… Bobber பைக்கிற்கு இணையான வடிவமைப்பில் பேரக் பைக்குகள்

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment