Samsuang Galaxy Fold Smartphone Launch : முதன் முதலாக மடிக்கும் ஆற்றல் பெற்ற ஸ்மார்ட்போன்களை உருவாக்கத் துவங்கியது சாம்சங் நிறுவனம் தான். அதன் பின்பு ஹூவாய் மேட் எக்ஸ் என்ற போனை உருவாக்கி அதன் சிறப்பசங்கள் மற்றும் குறைகளை கண்டறியும் முயற்சியிலேயே ஈடுபட்டவிட்டது ஹூவாய் நிறுவனம். ஆனால் சாம்சங் தொடர்ந்து தங்களின் டிவைஸை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வர ஆரம்பித்துள்ளது.
Advertisment
பிப்ரவரி மாதம் முதல் பார்வைக்காக வைக்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்ட் என்ற மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போன். ஏப்ரல் மாதம் வெளியீட்டுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு ஜூலை என்றது. ஆனால் தற்போது ஜூலையிலும் இந்த போன்கள் வெளியாகாது என்று தி கொரியன் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை உறுதிபடுத்தியுள்ளது.
2000 ஆயிரம் டாலர்களுக்கு இந்த போன் விற்பனையாகவுள்ளது. அறிமுக விழா முடிந்தவுடன் இந்த போனில் ஃபோல்ட் செய்ய மற்றும் இதர சிறப்பசங்கள் பயன்படுத்த தொழில்நுட்ப ரீதியாலான பிரச்சனைகள் இருக்கின்ற காரணத்தால் இதன் விற்பனைக்கான நாள் தாமதமான வண்ணமே உள்ளது.