ரூ.3000 வரை தள்ளுபடி விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

இந்த விலைக் குறைப்பால் மேலும் பல வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சாம்சங்

Samsung Galaxy A50s, Galaxy A30s prices slashed up to rs 3000 :  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ், கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் ஏ50எஸ் & ஏ30எஸ் ஸ்மார்ட்போனின் விலை

சாம்சங் ஏ50எஸ் ஸ்மார்ட்போன் இந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகமானது. 4ஜிபி/128ஜிபி மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 22,999 ஆகும். 6ஜிபி/128ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 24,999 ஆகும். அதே போன்று எம்30எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,999 ஆகும்.

தற்போது குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள விலை

தற்போது ஏ50எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு முறையே ரூ. 19,999 மட்டும் ரூ. 21,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று எம்30எஸ் போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 15,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க : ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 ப்ரீபெய்ட் ப்ளான்… நான் – ஜியோ கால்களுக்கு சூப்பர் சலுகை!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close