/tamil-ie/media/media_files/uploads/2019/10/EHVBD8UU0AEmuwA.jpg)
Samsung Galaxy A80 smartphones get price cut
Samsung Galaxy A80 smartphones get price cut in India : இந்த வருடம் ஜூலை மாதம் வெளியானது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன். இந்தியாவில் வெளியான முதல் ரொட்டேடிங் ட்ரிப்பிள் கேமரா ஸ்மார்ட்போன் இது. ரூ. 47,990க்கு அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. புதிய அறிவிப்பின் படி அமேசான் மற்றும் சாம்சங் ஈ-ஸ்டோரில் இந்த போன்கள் ரூ. 39,990க்கு கிடைக்கிறது. ஆன்லைனில் மட்டுமே விலைக்குறைப்பு கூறப்பட்டுள்ளது. ஆஃப்லைனில் விலைக்குறைப்பு குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
Samsung Galaxy A80 smartphone specifications
கறுப்பு, கோல்ட் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியது. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 730ஜி ஆக்டா கோர் பொறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் பொறுத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் (டோல்பி ஆட்மோஸ்) தியேட்டரில் பொறுத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்களுக்கு இணையான தரத்தில் ஆடியோவை தரக்கூடியவை.
ஆண்ட்ராய்ட் பையை அடிப்படையாக கொண்ட சாம்சங் நிறுவனத்தின் ஒன் யூ.ஐ. இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 6.7 இன்ச் அளவு ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
டூயல் நானோ சிம் பொறுத்திக் கொள்ளலாம். மெம்பரி கார்ட்களுக்கான ஸ்லாட்டுகள் இல்லை. இதன் மொத்த எடை 220 கிராம்கள். பேட்டரி செயல்திறன் 3700. 25 வாட்ஸ் சூப்பர் - ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியில் இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.