Samsung Galaxy Fold : இன்று சான்பிரான்சிஸ்கோ மாநகரில் நடைபெறுகிற்றது அன்பேக்ட் 2019 ஈவண்ட். வெகுநாட்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ஃபோல்டபிள் என்று கூறக்கூடிய மடக்கும் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
7.3 இன்ச் அளவுகொண்டுள்ள டேப்லட் மடக்கப்பட்டு ஸ்மார்ட்போனாகவும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதில் இன்பினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது.
உள்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் என சுமார் 6 கேமராக்களை கொண்டுள்ளாது இந்த போன். இதில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், இந்த போனின் பக்கவாட்டுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : அறிமுகமானது சாம்சங்கின் S10 போன்கள்... எப்போது விற்பனைக்கு வருகிறது?
Samsung Galaxy Fold விலை மற்றும் விற்பனை
கருப்பு, பச்சை, நீலம், மற்றும் வெள்ளி என நான்கு நிறங்களில் வெளியாகிறது இந்த போன். 1980 அமெரிக்க டாலர்கள் இருந்தால் தான் இதனை விலைக்கு வாங்க இயலும். இந்திய ரூபாய்ப்படி 1,40,000 ரூபாய் இந்த போன். 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்சன் கொண்டுள்ளது இந்த போன். இந்த போன்கள் ஏப்ரல் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
Samsung Galaxy Fold சிறப்பம்சங்கள்
7.3 அங்குல ஸ்கீரின்
இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரை மற்ற ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் திரையை விட 50% மெல்லியது.
7nm ஆக்டா-கோர் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரட்டை பேட்டரி கொண்ட சிஸ்டம் இது. இதனை சார்ஜ் செய்ய வையர்லெஸ் பவர் ஷேர் சிஸ்டம் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
டைனமிக் AMOLED திரை கொண்டுள்ளது. ஏ.கே.ஜி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
உள்பக்கம் 7.3 இன்ச் QXGA+ திரை
4.6இன்ச் HD+ திரை வெளிப்பக்கம் (21:9 aspect ratio)
கேமராக்கள் :
கவர் கேமரா : செல்பி கேமரா 10 எம்.பி
பின்பக்க ட்ரிப்பிள் கேமரா : 16 எம்.பி அல்ட்ரா வைட் கேமரா, 12 எம்.பி. வைட் ஆங்கிள் கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
முன்பக்க இரட்டைக் கேமரா : 10 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 8 எம்.பி. டெப்த் கேமரா
ப்ரோசசர்
7nm 64-bit ஆக்டா கோர் ப்ரோசசர், 12GB RAM (LPDDR4x), 512GB (UFS3.0)
பேட்டரி
4,380mAh செயல்திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது
இயங்குதளம்
ஆண்ட்ராய்ட் 9.0 பை
மேலும் படிக்க : வெளியானது உலகின் முதல் ஃபோல்டபிள் போன்… விலை என்ன தெரியுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.