Samsung Galaxy, Google Pixel, OnePlus : மே மாதம் தொடர்ந்தாற் போல் ப்ரீமியம் போன்களின் அணிவகுப்பில் தள்ளாடப் போகின்றது ஸ்மார்ட்போன் சந்தை. சாம்சங் நிறுவனத்தின் மிட்ரேஞ் ப்ரிமியம் போனான கேலக்ஸி ஏ80, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன், மற்றும் கேமரா குரு கூகுள் பிக்சலின் 3X சீரியஸ் போன்கள் என வரிசையாக மே மாதத்தில் வெளியாக உள்ளது.
Samsung Galaxy A80 Launch Date
சாம்சங் நிறுவனத்தின் ஏ சிரியஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தியாவில் மட்டும் 4.3 பில்லியன் வரை இந்த சீரியஸில் வருவாய் ஈட்ட முயற்சித்து வருகிறது சாம்சங் நிறுவனம். இந்த சீரியஸில் ஏ10 (ரூ.8,490), ஏ20 (ரூ.12,490), ஏ30 (ரூ.16,990) மற்றும் ஏ50 (ரூ.22,990) என போன்கள் வெளியாகியுள்ளன. தற்போது இதன் அடைத்த வெளியிடான ஏ70 மற்றும் ஏ80 அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ஏ80 ஸ்மார்ட்போன் வருகின்ற மேக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 50,000 ரூபாய் என முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Pixel 3a, Pixel 3a XL போன்களின் வெளியீடு
மே மாதம் 7ம் தேதி வெளியாகிறது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும். சமீபத்தில் இதன் கோட்நேம்கள் லீக்கானதைத் தொடர்ந்து, இதன் சிறப்பம்சங்கள் ஒன்றொன்றாக வெளியாக வந்த வண்ணம் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஐ/ஓ டெவலப்பர் கான்பிரன்சின் முதல் நாளாக மே 7ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.
மேலும் படிக்க : கூகுள் பிக்சல் 4 மற்றும் 4XL ஸ்மார்ட்போன்களின் கோட்நேம்ஸ் தெரியுமா?
OnePlus 7 Pro வெளியீடு
ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 7 ப்ரோ மற்றும் 7 ப்ரோவின் 5ஜி வேரியண்ட் என மூன்று போன்களூம் வருகின்ற மே 14ம் தேதி வெளியாக உள்ளது. வெகுநாட்கள் கழித்து ஒன்ப்ளஸில் ப்ரோ வேரியண்ட் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த போன் தொடர்பாக எண்ணற்ற சிறப்பம்சங்கள் வெளியாகி வருகின்றன. மக்கள் மத்தியில் இந்த போனின் அறிமுகமத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
மேலும் படிக்க : ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களா நீங்கள் ? உங்களுக்கான இன்ப செய்தி இதோ !