Samsung Galaxy M10 Price : கேலக்ஸி ஆன் சீரியஸ்ஸிற்கு மாற்றாக புதிய போன்களை களம் இறக்க இருப்பதாக அறிவித்திருந்தது சாம்சங். எம் சீரியஸ்ஸில் எம்10, எம்20 என இரண்டு போன்களை தற்போது இந்தியாவில் வெளியிட இருக்கிறது சாம்சங்.
பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து வெளியாக இருக்கும் இந்த போன்களின் விலை ரூ.15,000க்கும் குறைவாக இருக்கும் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங்கின் எம்10 போனின் விலை 9,500 ரூபாயில் இருந்து வெளியாக இருக்கிறது. எம் 20 போனின் விலை ரூ.15,000ல் இருந்து ஆரம்பமாக உள்ளது.
இந்தியாவில் ரெட்மி போன்கள் தான் தற்போது பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது சாம்சங் நிறுவனம் புதிய போன்களை களம் இறக்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்10, எம்20 போனின் சிறப்பம்சங்கள்
கேலக்ஸி எம் சிரியஸில் வர இருக்கும் புதிய போன்களில் எம்10 மற்றும் எம்20 இந்த மாதத்தில் இந்தியாவில் வெளியாகிறது.
Samsung Galaxy M10 Price and Specifications :
இன்ஃபினிட்டி – வி ஸ்டைல் டிஸ்பிளேவுடன் வெளியாகிறது இந்த போன். இதன் அளவு 6.5 இன்ச் ஆகும். எக்ஸினோஸ் 7870 ப்ரோசசரும் மலி-டி830 கிராபிக்ஸ் ப்ரோசசர் யூனிட்.
3ஜி ரேம்முடன் கூடிய 16ஜிபி மற்றும் 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வருகிறது இந்த போன்.
ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன். 3400mAh பேட்டரியுடன் வெளியாகிறது.
13 எம்பி மற்றும் 5 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது இந்த போன்.
Samsung Galaxy M20 Price and Specifications :
இது ஒரு எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் மாடல் எண் SM-M205F. இதன் ரெசலியூசன் 2340×1080 பிக்சல்கள் ஆகும்.
ஸ்கிரீன் அஸ்பெக்ட் ரேசியோ 19.5:9 ஆகும். பிராசசர் எக்ஸினோஸ் 7885 பயன்படுத்தப்பட்டுள்ளது. Mali-G71 MP2 கிராபிக்ஸ் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த போன்.
ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.