/tamil-ie/media/media_files/uploads/2019/03/samsung-reuters-759-1.jpg)
Samsung Galaxy Note 10 Pro latest update : இந்த வருடத்தின் இறுதியில் வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற ஸ்மார்ட்போனில் 4500 mAh செயல்திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட உள்ளது.
Samsung Galaxy Note 10 Pro latest update
இது குறித்த தகவல்கள் இணையத்தில் லீக்காகி அங்காங்காங்கே மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த பேட்டரியின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அதில் மாடல் எண் EB-BN975ABU என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் மாடலோடு நேரடியாக தொடர்பில் இருப்பதை நம்மால் காண இயலும்.
N975(Note10 Pro 4G) 4500mAh 25w
— Ice universe (@UniverseIce) 28 April 2019
மேலும் இந்த பேட்டரி 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் சார்ஜ் ஆககூடியது என்ற தகவலும் கூடுதலாக வெளியாகியுள்ளது. நான்கு வேரியண்ட்களாக வெளியாக இருக்கும் இந்த போன்களில் இரண்டு வேறுபட்ட திரை அளவுகள் உள்ளன. இரண்டு 4ஜி மற்றும் 5ஜி வேரியண்டுகளும் அதில் உள்ளடக்கம்.
எப்போதுமே சிங்கிள் வேரியண்ட்டை மட்டுமே வெளியிடும் சாம்சங் நிறுவனம் முதல்முறையாக நான்கு வேரியண்ட்டுகளுடன் ஒரு போனை அறிமுகம் செய்ய உள்ளது .
மேலும் படிக்க : 32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் ஒரு ஸ்மார்ட்போன்… அதுவும் ஆச்சரியப்படும் விலையில்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.