Foldable, 5G, Finger Print Sensor under Display - இன்னும் என்னென்ன இருக்கிறது சாம்சங்கின் 2019 திட்டத்தில் ?

மற்ற நிறுவனங்களில் இருந்து சாம்சங் தனித்து தெரிய விரும்பினால், அதன் ஹார்ட்வேர்டில் தான் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்

மற்ற நிறுவனங்களில் இருந்து சாம்சங் தனித்து தெரிய விரும்பினால், அதன் ஹார்ட்வேர்டில் தான் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாம்சங் 2019, Samsung New phones, Samsung 2019, Foldable phones online, Bendable phones Samsung, 5G technology

சாம்சங் 2019

சாம்சங் 2019 : தென்கொரியாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் அடுத்த வருடம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய கேட்ஜெட்டுகளை வெளியிட உள்ளது. 2019ற்கான திட்டத்தில் தற்போது இடம் பிடித்திருப்பது சாம்சங் கேலக்ஸி S10.

சாம்சங் 2019 -ம் ஆண்டில் வெளியிட இருக்கும் டிவைஸ்கள் ஒரு பார்வை

Advertisment

அமெரிக்காவில் வெளியாக இருக்கும் இந்த போனில் 5ஜி வயர்லெஸ் சிப்செட் தொழில் நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க : சாம்சங்கிற்கு இணையாக சிப்செட்டுகளை தயாரிக்கும் ஹூவாய் நிறுவனம்

டிஸ்பிளேவிற்கு அடியில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டு அதிக எண்ணிக்கையில் போன்களை உருவாக்குவதுதால் தான் மிகவும் இந்த டிவைஸ் வெளியாக அதிக நாட்கள் ஆகும் என மக்கள் நினைக்கிறார்கள்.

சாம்சங் கேலக்ஸி S10 மலிவு விலை போன்

விலை குறைவான சாம்சங் கேலக்ஸி S10 போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. 5.9 இன்ச் அளவுள்ள இந்த போனில் இரண்டு பக்க கார்னர்களும் வட்ட வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. OLED திரையில் பெசல் விட்த் இல்லை. ஆண்ட்ராய் பை இயங்குதளத்தில் இயங்க உள்ளது இந்த போன். மிகப் பெரிய எதிர்பார்ப்பினை இந்த இரண்டு போன்களும் ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்டபில் போன்கள் (Bendable Phones)

Advertisment
Advertisements

சாம்சங் கேலக்ஸி S10 ல் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வர விளைவதைப் போலவே அடுத்த வருடத்தில் பெண்டபில் (bendable) போன்களையும் மக்களிடையே அறிமுகப்படுத்த இருக்கும் திட்டத்தில் இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

இந்த ரக போன்களுக்கு வின்னர் என்று பெயர் சூட்டப்பட்டு அதன் வடிவமைப்பு வேலைகளை தொடங்கி உள்ளது சாம்சங் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெண்டபில் போன்களின் திரைக்கடியில் பிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்காது. இந்த போனுடன் இணைப்பாக 4 இன்ச் திரை ஒன்று இணைக்கபப்ட உள்ளது. முன்பு மோட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்திய ஃப்ளிப் டைப் போன்களைப் போல் இது செயல்படும்.

இதன் எடை 200 கிராம்களுக்கு மேலாக இருக்கும். இதன் பக்க இணைப்புகளை சரிபார்க்க 200,000 முறைகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் பேஸ்ட்ரீட் ரிசர்ச்சில் அனலிஸ்ட்டாக பணிபுரியும் க்ளிஃப் மல்டோனாடோ குறிப்பிடுகையில் “மற்ற நிறுவனங்களில் இருந்து சாம்சங் தனித்து தெரிய விரும்பினால், அதன் ஹார்ட்வேர்டில் தான் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார். மேலும் படிக்க : ஹூவாயின் ஃபோல்டபல் போன் எப்படி இருக்கும் ?

2019 ம் ஆண்டினை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக சாம்சங் மாற்றும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Samsung

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: