Samsung Mobile Phone News In Tamil: சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாக உள்ளது. இது அமேசான் இந்திய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 31 தொடரின் அடுத்த மாடலாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung M31S india launch price: சாம்சங் கேலக்ஸி எம் 31s எதிர்பார்க்கப்படும் விலை
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனின் விலையை ஜூலை 30 ஆம் தேதிஅறிவிக்கவுள்ளது. இந்த சாதனம் அமேசானில் விற்கப்படும் என்பது தெரிகிறது.
ஸ்டோக்ஸ் சேஸிங் கோலி; Ronaldo-ஸ் 30 லீக் கோல் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் நியூஸ்
பிரபல, 91Mobiles அறிக்கையின்படி, கேலக்ஸி எம் 31S ஆகஸ்ட் 6 முதல் கிடைக்கும், இதன் ஆரம்ப விலை ரூ .20,000 ஆகும். கேலக்ஸி எம் 31 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .17,499 ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி எம் 31s சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M317F கொண்டதாகவும், 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது, ஒன்யூஐஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி உள்ளடக்கத்துடன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி நீட்டிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் மையத்தில் வாட்டர் டிராப் நாட்ச் போல் இல்லாமல் துளை பஞ்ச் கட்அவுட் இருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது வெஸ் ப்ளூ நிறத்தின் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் மாடல் எண் SM-M317F ஆனது கீக்பெஞ்ச் பட்டியலில் சமீபத்தில் காணப்பட்டது, கீக்பெஞ்ச் பட்டியலின் படி கேலக்ஸி M31s, சிங்கிள் கோர் சோதனையில் 347 புள்ளிகளையும், கீக்பெஞ்ச் பட்டியலில் மல்டி கோர் சோதனையில் சுமார் 1,256 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
‘Mr Incredible’ – பென் ஸ்டோக்ஸ் எனும் அரக்கனுக்கு கேப்டன் ரூட் புகழாரம்
SamMobile தகவலின்படி, இதில் 6000 எம்ஏஹெச் பேட்டரியை 15W சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி அம்சத்துடன் வருகிறது.
மொபைல் பின்பக்க கேமரா 64MP quad camera setup கொண்டுள்ளது. இதன் மூலம், ஒரே டேக்கில் பல போட்டோக்களையும், வீடியோக்களையும் பயனர்கள் எடுக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil