4,356 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Samsung Tamil News, Samsung Galaxy Z Fold 2: ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி இசட் Fold 2 சிறப்பம்சங்கள் கசிந்துள்ளன. Samsung Galaxy Z Fold 2 மொபைல் குறித்த சில தகவல்கள் MySmartPriceல் வெளியாகியுள்ளது.
Advertisment
ஸ்மார்ட்போனின் உள் டிஸ்பிளே வலது புறத்தில் உள்ள பெரிய கேமரா notchக்கு பதிலாக, Samsung Galaxy Z Fold 2 ஒரு punch-hole கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனத்தின் வெளிப்புறத்தில் உள்ள திரை அளவு அதன்முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது மிகவும் மேம்பட்டுள்ளது.
Galaxy Z Fold 2 தொலைபேசியைப் பற்றி நமக்கு தெரிந்தவை
Advertisment
Advertisements
இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெளியான உறுதி செய்யப்படாத தகவல்கள் படி, இது 7.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் அமோலேட் foldable டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும், முந்தைய பதிப்பில் 4.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் ஒப்பிடும்போது 6.23 இன்ச் டிஸ்ப்ளே வெளியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய உறுதி செய்யப்படாத தகவல்கள் சில முரண்பாடுகள் இருந்தன, ஏனெனில் இது S-Pen அம்சம் கொண்டிருக்கும் என்று சிலர் கூற, சில தகவல்கள் அதை மறுத்தன.
இருப்பினும், புதிதாக கசிந்த தகவல்களின் படி, பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. டிரிபிள்-கேமரா அமைப்பு வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸில் உள்ளதைப் போலவே தோன்றுகிறது. எதுவாயினும், ஆகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள virtual Galaxy Unpacked நிகழ்வின் மூலம் தெரிய வரும்.
சாம்சங் கேலக்ஸி இசட் Fold 2 சிறப்பம்சங்கள்
உறுதி செய்யப்படாத தகவல்கள் படி, Galaxy Z Fold 2 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை பின்புறத்தில் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், இரண்டு 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ மற்றும் வைட் ஆங்கிள் கேமராக்களுடன் இருக்கும் என்று தெரிகிறது. Fold 2 மொபைல் 5 ஜி நெட்வொர்க்குகளை ஆதரிக்கும். மேலும், 4,356 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது 15W வயர்லெஸ் மற்றும் ரிவர்ஸ்-வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். கேலக்ஸி Fold 2 Snapdragon 865 Plus chipset, 16GB RAM மற்றும் 512GB storage கொண்டு இயங்கக்கூடும்.
Note 2 ஐப் போலவே, கேலக்ஸி Fold 2 க்கும் copper colour விருப்பம் இருக்கும். சாம்சங் கேலக்ஸி Fold விலை ரூ .1,64,999. புதியவெர்ஷனும் இதேபோன்ற விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil