ஒன்றல்ல, இரண்டல்ல... ஒரே நேரத்தில் 6 ஐபோன்களை வெளியிடுகிறது ஆப்பிள்!

அமெரிக்காவின் அநேக நகரங்களிலும் 5ஜி மாடல் ஐபோன் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது!

அமெரிக்காவின் அநேக நகரங்களிலும் 5ஜி மாடல் ஐபோன் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Six Apple iPhone 12 models could come in 2020

Six Apple iPhone 12 models : ஆப்பிள் நிறுவனத்தின் போன்கள் அல்லது கேட்ஜெட் அறிமுகம் என்றால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. சிங்கிள் ஹெட் செட் என்றாலே பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும். தொடர்ச்சியாக 6 போன்களை ஒரே அறிமுக விழாவில் வெளியிட்டால் சொல்லவா வேண்டும். சமீபத்தில் வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த சீரிஸான ஆப்பிள் ஐபோன் 12, 6 வேரியண்ட்டுகளில் வெளியாக உள்ளது.

Advertisment

ஒரே நேரத்தில் 6 போன்களை வெளியிடுவது இது தான் முதல்முறை. இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் அடங்கும்.  வெவ்வேறு வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த 6 போன்களும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா ஏற்கனவே நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பரில் வெளியாக இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அமெரிக்காவின் அநேக நகரங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : குறைவான விலையில் மீண்டும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

Advertisment
Advertisements

4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்டுகள் என இரண்டு நெட்வொர்க்கிலும் தனித்தனியாக செயல்படுமாறு 6 ஐபோன்களும் உருவாக்கப்பட்டிருப்பதாக தி அனலிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Apple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: