Smartphones Launch Next Week In India : இந்திய வாடிக்கையாளர்களை குறிவைத்து தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். இதன் மூலம் மக்கள் தங்களின் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன்களை அவர்களின் விருப்பப்படி வாங்கிக் கொள்ள நிறைய சாய்ஸ்கள் தரப்படுகிறது.
Smartphones Launch Next Week In India
அடுத்த வாரம் சாம்சங், விவோ, மற்றும் ரெட்மீ என பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் போன்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளனர்.
ரெட்மி நோட் 7
வருகின்ற 28ம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. சீனாவில் ஏற்கனவே சுமார் 1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்துள்ளது இந்த நிறுவனம்.
நோட் 5 ப்ரோவிற்கு பிறகு அதிக அளவில் எதிர்பார்ப்பினை கிளப்பியிருக்கும் போன் இதுவே. ஏன் எனில் இதன் கேமரா 48 எம்.பி செயல் திறன் கொண்டதாகும்.
ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்
- ட்விலைட் கோல்ட், பேண்டசி ப்ளூ, மற்றும் ப்ரைட் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகிறது இந்த போன்.
- ஸ்நாப்ட்ராகன் 660 ப்ரோசசருடன் கூடிய அட்ரெனோ 512 கிராபிக்ஸ் கார்ட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 4000 mAh நான் ரிமூவபிள் பேட்டரியுடனும், குயிக்சார்ஜ் 4.0 தொழில்நுட்பத்துடனும் இந்த போன் வெளியாகியுள்ளது.
- டைப்-சி யூ.எஸ்.பி சார்ஜர்
- 48 எம்.பி. முதன்மை கேமரா, மற்றும் 5 எம்.பி. இரண்டாம் கேமரா போனின் பின்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்பி கேமரா 13 எம்.பி. ஆகும்.
- Sony IMX586 sensor 48 எம்.பி. கேமராவை கொண்டுள்ளது இந்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போன் தொடர்பான முழுமையான த்கவல்களைப் படிக்க
விவோ வி15 ப்ரோ – பிப்ரவரி 20 வெளியீடு
பாப்-அப் கேமராவுடன் வெளியாகிறது இந்த போன். இதனை எக்ஸ்க்ளூசிவாக ஃப்ளிப்கார்ட் இணைய தளத்தில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்
- மூன்று கேமராக்களுடன் வெளிவரும் இந்த போனிலும் 48எம்.பி. செயல் திறன் கொண்ட முதன்மை சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றொன்று 3டி சென்சார் கேமராவும். மூன்றாவது கேமரா வைட் ஆங்கிள் லென்ஸ்சைக் கொண்டுள்ளது.
- செல்ஃபி கேமரா 32எம்.பி பாப் அப் கேமராவாகும்.
- குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இண்ட்ரெநெல் ஸ்டோரேஜ்
- 6.39 இன்ச் ஃபுல் எச்.டி திரை கொண்டுள்ளது
- 3700 mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த போன்
- இதன் விலை 30,000 ரூபாயாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்30
- இந்த போனும் இந்தியாவில் பிப்ரவரியில் அறிமுக உள்ளது. மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன்.
- 13எம்.பி + 5 எம்.பி + 5 எம்.பி – பின்பக்க கேமராக்களின் செயல்திறன்
- முன்பக்க கேமரா 16 எம்.பி செயல்திறன் கொண்டதாகும்
- 5000mAh செயல்திறன் கொண்ட பேட்டரி இதில் பொறுத்தப்பட்டுள்ளது
- எக்ஸினோஸ் 7904 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது
- இதன் விலை 15-16 ஆயிரம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
- எம் சீரியஸ் போன்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர்ந்த ரெட்மீ போன்களுக்கு போட்டியாகவே சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம் சீரியஸ் போன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ரூ. 8000-க்கு அறிமுகமாகிறது சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்…