Advertisment

ரூ. 12 ஆயிரத்துக்குள் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? உங்களுக்கான பட்டியல் இதோ!

5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் இந்த போனின் சார்ஜர் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Smartphones under Rs 12,000 Redmi Note 8, Moto One Macro, Realme 5, Vivo U10`

Smartphones under Rs 12,000 Redmi Note 8, Moto One Macro, Realme 5, Vivo U10

Smartphones under Rs 12,000 Redmi Note 8, Moto One Macro, Realme 5, Vivo U10 : உங்களின் பட்ஜெட் ரூ. 12 ஆயிரம் என்றால் இந்த போன்கள் வாங்குவது குறித்து ஒரு யோசனை செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் நிறைய சிறப்பம்சங்களுடன் வெளியாவது மட்டுமன்றி குறைந்த விலையிலும் வெளியாகிறது.

Advertisment

ரெட்மீ நோட் 8 (Redmi Note 8)

இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 9999 ஆகும். 4ஜிபி ரேமுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனின் அதிக பட்ச விலை ரூ. 12,999. 48 எம்.பி. க்வாட் ரியர் கேமரா செட்-அப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதில் 8 எம்.பி. அல்ட்ரா வைட் சென்சார், 2 எம்.பி. டெஃப்த் சென்சார், மற்றும் 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மோட்டோரோலா ஒன் மேக்ரோ (Motorola One Macro)

4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9999. மீடியா டெக் ஹெலியோ ப்ரோசசர் பி20யை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி செயல்திறன் 4,000mAh ஆகும். இதன் பின்பக்க கேமராக்கள் அனைத்தும் மேக்ரோ புகைப்படங்களை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Airtel Prepaid Plans : ரூ. 4 லட்சம் வரையில் காப்பீட்டினை வழங்கும் ஏர்டெலின் புதிய ரீசார்ஜ் திட்டம்!

Realme 5: Rs 8,999

3ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,999 ஆகும். 4ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9999 ஆகும். டாப் எண்டாக வரும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசரை கொண்டு இயங்குகிறது. நான்கு பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 12 எம்.பி + 8 எம்.பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2 எம்.பி. பூக் லென்ஸ், மற்றும் 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த ஸ்மார்ட்போன். 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் இந்த போனின் சார்ஜர் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவோ யூ10 - Vivo U10

3ஜிபி 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,990 ஆகும். இதன் அடுத்த மாடலான 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,990 ஆகும். ஸ்நாப்ட்ராகன் 665 ப்ரோசசரில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 5000mAh. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் ரீசார்ஜ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சார்ஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட் - அப் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. வைட் ஆங்கிள் கேமரா, மற்றும் 2 எம்.பி. பூக் லென்ஸ் ஆகும்.

Redmi Vivo Smartphone Moto
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment