Advertisment

10 ஜிபி RAM உடன் களம் இறங்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை

தற்போது ஒன்ப்ளஸ், விவோ, நுபியா, சியோமி போன்ற நிறுவனங்கள் தங்களின் 10GB RAM போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Smartphones with 10GB RAM

Smartphones with 10GB RAM : ஸ்மார்ட்போன்களின் அதிவேக செயல்பாட்டினை உறுதி செய்வது அதன் RAM செயல்திறன் தான். 6ஜிபி RAM என்பதே அதிவேக செயல்பாட்டினைத் தரும். ஆனால் சில போன்கள் இதைவிட மிகவும் அதிவேகமாக ஸ்மார்ட்போன்கள் செயல்பட வேண்டும் என 10ஜிபி RAM போன்களை அறிமுகப்படுத்த உள்ளனர். ஏற்கனவே சில போன்கள் அறிமுகமாகியும் உள்ளன.

Advertisment

2018ம் ஆண்டின் பிற்பாதி வரை 10 ஜிபி ரேம்கள் இருக்கும் போன்கள் அறிமுகமாகவில்லை என்பது தான் உண்மை. சியோமியின் மை மிக்ஸ் 3 வெளியான பின்பு, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பத்தை தங்களில் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தினர்.

தற்போது ஒன்ப்ளஸ், விவோ, நுபியா, சியோமி போன்ற நிறுவனங்கள் தங்களின் 10GB RAM போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. RAM என்பது நேரடியாக போனின் இயங்கு தளத்துடன் (Operating System) இணைக்கப்பட்டிருக்கும். ஒரு செயலியின் அதிவேக செயல்பாடு என்பது இயங்கு தளத்தின் வேகத்தினைப் பொறுத்தே அமையும். மிக வேகமான செயல்பாட்டிற்கு RAM உதவி புரிகிறது.

Smartphones with 10GB RAM : OnePlus 6T McLaren Edition

ஸ்போர்ட்ஸ் கார்கள் போல் மிக வேகமாக செயல்படும் என்று தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ளது ஒன்ப்ளஸ் 6டி சீரியஸ்ஸில் வெளியாகும் இந்த போன். வ்ராப் சார்ஜ் 30 டெக்னாலஜியுடன் வெளியாகிறது இந்த போன். 20 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் இந்த போன் வேலை செய்யும் என்பது இதன் ஹைலைட்.

மேலும் படிக்க : ஒன்ப்ளஸ் 6டி மெக்லாரன் எடிசன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

publive-image OnePlus  6T McLaren Edition

விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே (Vivo NEX Dual Display)

இந்த போனும் 10ஜிபி RAM உடன் வெளியாகும் போன் ஆகும். இதற்கு முன்பு வெளியான விவோ நெக்ஸ் ஸ்மார்ட் போனில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இரட்டை டிஸ்பிளேயுடன் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று பின்பக்க கேமராக்கள் இதில் பொறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : விவோ நெக்ஸ் டூயல் டிஸ்பிளே சிறப்பம்சங்கள் மற்றும் விலை

Smartphones with 10GB RAM, Vivo Nex Dual Display Vivo Nex Dual Display

 

சியோமி மை மிக்ஸ் 3 (Xiaomi Mi Mix 3)

நியோடைமியம் மேக்னடிக் ஸ்லைடர் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது இந்த போன். முன்பக்க கேமரா மற்றும் இயர் பீஸ் இரண்டும் திரைக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த போன் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அடுத்த வருடம் முதல் காலாண்டில் இந்த போன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது இந்த போன் என்பது ஹைலைட்.

மேலும் படிக்க : 10 ஜிபி RAM உடன் சியோமியின் புதிய போன்.

Xiaomi Mi Mix 3, Smartphones with 10GB RAM Xiaomi Mi Mix 3

 

 

சியோமி ப்ளாக் ஷார்க் ஹெலோ

சியோமியின் இரண்டாவது கேமிங் ஸ்மார்ட் போன் இது தான். 10ஜிபி RAM உடன் பயன்பாட்டிற்கு வந்த முதல் போனும் இது தான். குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ராசசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு சீனாவில் மட்டுமே இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Xiaomi Black Shark Helo, Smartphones with 10GB RAM Xiaomi Black Shark Helo

Oneplus Vivo Smartphone Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment