Sony PlayStation 5 : No official launch at E3 2020 : இந்த வருடம் நடைபெற இருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் எண்டெர்டெய்மெண்ட் எக்ஸ்போவில் தங்களுடைய புதிய கேமிங் கன்சோலை வெளியிடவில்லை என்பதை உறுதி செய்துள்ளது சோனி நிறுவனம். தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இந்த நிகழ்வினை புறக்கணித்து வருகிறது சோனி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியின் 'விஷன்’ சரியாக இருப்பதாக தெரியவில்லை. அதனால் இந்த வருடம் இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்க்கின்றோம் என்று அறிவித்துள்ளது சோனி நிறுவனம்.
Advertisment
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...
25 வருடங்களுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்ட சோனியின் இந்த ப்ளே ஸ்டேஷன் கேமிங் அனுபவத்தை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தின் பிற்பாதியில் ப்ளே ஸ்டேஷன்5-ஐ வெளியிடும் திட்டம் வைத்திருந்தது சோனி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விழாவை புறக்கணித்தது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது என்றும் கூறலாம்.
சோனி இதற்கு முன்பு இந்த கண்காட்சியில் தான் ப்ளே ஸ்டேசன், மற்றும் ப்ளே ஸ்டேசன் 2 ஆகியவற்றை அறிமுகம் செய்தது. 2006ம் ஆண்டு ப்ளே ஸ்டேசன் 3-ஐ அறிமுகம் செய்த சோனி 2013ம் ஆண்டு ப்ளே ஸ்டேசன் 4-க்கான வடிவமைப்பை முதன்முதலில் இதே ஷோவில் வெளியிட்டது. ஆனால் தற்போது வெளியான அறிவிப்பால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் வருகின்ற பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஒரு முக்கிய நிகழ்விற்காக சோனி நிறுவனம் அனைவருக்கும் அழைப்பிதழ்களை அளித்துள்ளது. இந்த நிகழ்வில் ஒரு வேளை சோனி ப்ளே ஸ்டேஷன் 5 வெளியாவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.