கனவுகளை விட்டுவிடாதீர்கள், அவற்றில் நம்பிக்கை வையுங்கள் – விண்வெளி வீரர் அலிசா கர்சான்

உங்களிடமிருந்து உங்களின் கனவுகளை யாரும் பறித்துச் செல்லும்படி விட்டுவிடாதீர்கள்.

By: Updated: January 12, 2020, 04:54:47 PM

மனிதர்கள் ஏன் செவ்வாய் கோளுக்குச் செல்லவேண்டும்? அது எப்படி இந்த உலகத்தை மாற்றுவதற்கு உதவப்போகிறது? இப்படியெல்லாம் செவ்வாய்ப் பயணத்தைப் பற்றி நீங்கள் வியந்து வருகிறீர்கள் என்றால், ஒரு பதினெட்டு வயது விண்வெளி வீரர் அலிசா கர்சான் செவ்வாய்க்குப் போவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார் என்பது இன்னொரு புறம் நடக்கிறது. 2033ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசாவின் பயணத்திட்டத்துக்காக அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

19ம் தேதி துவங்கும் கிரேட் இந்தியன் சேல்! இந்த முறை என்ன வாங்க ப்ளான்?

தலைமைத்துவம் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான யூத இளைஞர்களின் ஒரு குழுவான பி.பி.ஒய்.ஓ.வின் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் பேசியபோது அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது, இது:

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

“ நம்முடைய முன்னோர்கள் உலகம் முழுக்கச் சென்றார்கள். அதன் மூலம் இந்த உலகத்தை வாழ்வதற்குரிய நல்ல இடமாக மாற்றியமைத்தார்கள். செவ்வாய்ப் பயணமும் அதைப் போலத்தான். நாம் செவ்வாய் காலகட்டத்தைச் சேர்ந்த தலைமுறையினர். ஒன்றிணைந்து நாம் எதையும் சாதிக்கமுடியும்”

மேலும், அலிசா தன் பேச்சில் கனவுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார்.

ஆடி பாடி அதகளமான வரவேற்பு, அரங்கத்தை தனது ஸ்டைலில் தெறிக்க விட்ட வடிவேலு!

“ அச்சத்தாலும் கவலையாலும் மக்கள் தங்கள் கனவுகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். கனவு காண்பதை நிறுத்தவேகூடாது. அவற்றை விட்டுவிடவும் கூடாது. உங்களிடமிருந்து உங்களின் கனவுகளை யாரும் பறித்துச் செல்லும்படி விட்டுவிடாதீர்கள். இது, மாற்றத்துக்கான ஒரு பொழுது. மற்றவர்க்கு உதவுவதையும் ஊக்குவியுங்கள்” என்பதும் அலிசாவின் அழுத்தமான கருத்து.

இதை ஆங்கிலத்தில் படிக்க – Believe in your dreams, appreciate oneness and help others: Astronaut Alyssa Carson

தமிழில்  – இர.இரா.தமிழ்க்கனல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Lifestyle News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Astronaut alyssa carson inspirational speech nasa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X