வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை சரிபார்க்க வேண்டாம் !

மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு.

மொபைல் நம்பர் வாங்க ஆதார் அடையாள அட்டை
மொபைல் நம்பர் வாங்க ஆதார் அடையாள அட்டை

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு செப்டம்பர் 26ம் தேதி மத்திய அரசின் எந்தெந்த சேவைகளுக்கெல்லாம் ஆதார் கட்டாயம் மற்றும் கட்டாயமில்லை என்று ஒரு தீர்ப்பினை வழங்கியது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

மொபைல் நம்பர் வாங்க ஆதார் அடையாள அட்டை தேவையில்லை

அந்த தீர்ப்பில் மொபைல்களுக்கு சிம் கார்ட் வாங்கும் போது ஆதார் எண் இணைப்பு அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு புதிதாக சிம் கார்டுகள் வாங்குவதற்கு ஆதார் எண்ணை சமர்பிக்க தேவையில்லை என்று கூறி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தற்போது ஏற்கனவே ஆதார் எண்களை பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களின் அடையாள அட்டையை பரிசோதனை செய்ய வேண்டாம் என டெலி ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு.

வாடிக்கையாளர்கள் தாமாக முன் வந்து ஆதார் அட்டை விபரத்தை கொடுத்தால் மட்டும், அந்த தகவலகளை சேமித்து வைத்தால் போதும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது மத்திய அரசு.

ஆதார் அடையாள எண்களை சரிபார்க்கும் திட்டத்தை அக்டோபர் 15ம் தேதிக்குள் கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே இருக்கும் பழைய முறையை பயன்படுத்தி, பயனாளர்களை நேரில் பார்த்து அடையாளப்படுத்தி சிம் கார்டுகள் தரும் முறையை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Stop using aadhaar authentication for verifying existing mobile customers govt to telcos

Next Story
Foldable, 5G, Finger Print Sensor under Display – இன்னும் என்னென்ன இருக்கிறது சாம்சங்கின் 2019 திட்டத்தில் ?சாம்சங் 2019, Samsung New phones, Samsung 2019, Foldable phones online, Bendable phones Samsung, 5G technology
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com