சன் டேரக்ட் வழங்கும் DPO வருடாந்திர ப்ளான்கள் என்னென்ன?

டாட்டா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் போன்ற நிறுவனங்களும் தங்களின் வருடாந்திர சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளன.

By: March 28, 2019, 3:10:50 PM

Sun Direct DPO Channel Packs : ட்ராய் அறிவித்த புதிய கேபிள் டிவி சட்டத்தின் கீழ் பல்வேறு குழப்பங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்கள் ஆகியவற்றை சரி செய்யும் நோக்கில் சன் டேரக்ட் ஒரு முழு வருடத்திற்கான ப்ளான்களை அறிமுகம் செய்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு 6 மாத சேவைகள் மற்றும் மூன்று மாத சேவைகளை வழங்கியது.  தற்போது வருடாந்திர சேவையில் டி.பி.ஒ பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு 6 மாத பேக்குகளை 1 வருடத்திற்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Sun Direct DPO Channel Packs

சன் டேரக்ட் தெலுங்கு DPO பேக்கை ஒரு வருடத்திற்கு பெற வேண்டும் என்றால் 2,422.88 ரூபாய் மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி 18% பணத்தினை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும். இதே பேக்கை மக்கள் 6 மாதத்திற்கு ரூ.1,236.44, ரூ.643.22 மற்றும் ரூ.230.5 க்கு பெற்றுக் கொள்ளலாம்.

இது போன்ற 12 மாதங்களுக்கு தேவையான பேக்கினை பெறும் போது  வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையினை வழங்கி வருகிறது சன் டேரக்ட் நிறுவனம்.

இந்த டி.பி.ஓ பேக்குகள் தமிழ், தெலுங்கு, கன்னடா, வங்கம், மலையாளம், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலாக சன் டி.டி.எச் நிறுவனம் தான் வருடாந்திர பேக்குகளை அறிமுகம் செய்தது. வருங்காலங்களில் டாட்டா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் போன்ற நிறுவனங்களும் தங்களின் வருடாந்திர சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளன.

மேலும் படிக்க : ஜியோ Vs வோடாஃபோன் vs ஏர்டெல் : 1.5 ஜிபி டேட்டா தரும் சிறந்த ப்ளான்கள் எவை?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Sun direct dpo channel packs now available for yearly subscription

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X