Sun Direct revokes Network Capacity Charges : இந்திய தொலைத் தொடர்பு வாரியமான ட்ராய் சமீபத்தில் கேபிள் டிவி சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. சன் டிடிஎச் வாடிக்கையாளர்களுக்கு தற்போது முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.
தற்போது அமலில் இருக்கும் கேபிள் டிசி சட்டத்தின் படி, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களுக்கான மாதாந்திர தவணையை செலுத்தி, அந்த சேனல்களை பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் என்.எஃப்.சி என்ற அடிப்படை நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணமான NCF-ஆக 130 ரூபாயையும், ஜி.எஸ்.டி வரியையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சன் டிடிஎச்சில் என்.சி.எஃப். கட்டணத்தை நீக்கி அறிவித்துள்ளது. இதனால் சன் டிடிஎச் சேவையில் பார்க்கப்படும் 100 சேனல்களுக்கு வாடிக்கையாளர்கள் என்.சி.எஃப். கட்ட வேண்டாம். அந்த சேனல்கள் ஃப்ரீ டூ ஏராக ஒளிபரப்படப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை சன் டிடிஎச் அறிவித்துள்ளது.
தற்போதைய கேபிள் சட்டத்தின் படி கட்டணங்கள் வசூல் செய்வது எப்படி ?
இரண்டு விதமான கட்டணங்கள் இதற்குள் அடங்கும். ஒன்று கண்டெண்ட் சார்ஜ். இதற்கான கட்டணம் முழுமையாக சேனல்களின் உரிமையாளர்களுக்கு அளிக்கப்படும். மற்றொன்று என்.சி.எஃப். எனப்படும் நெட்வொர்க் கெப்பாசிட்டி சார்ஜஸ், கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அல்லது டி.டி.எச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாகும்.
என்.சி.எஃப். நீக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பம் போல் எண்ணற்ற FTA சேனல்களை பார்க்க இயலும்.
மேலும் படிக்க : டாட்டா ஸ்கை வழங்கியிருக்கும் புதிய சேனல் கட்டணம் என்ன ?