ஐ.டி உலகினை ஆளும் தென்னிந்தியர்கள்... தலை சிறந்த இயக்குநர்களாக சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா தேர்வு

அமெரிக்கா முழுவதும் உள்ள 50,000 நிறுவனங்களில் வேலை செய்யும் 10 மில்லியன் நபர்களின் கருத்துகளை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது

Sundar Pichai and Satya Nadella : சிலிக்கான் வேலியில் இருக்கும் தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வாகிக்கும் இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக இருப்பது பல்வேறு நாட்டினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிலிக்கான் வேலியில் வேலை செய்யும் ஒவ்வொரு அமெரிக்கவாசியின் கனவும், ஒரு தலை சிறந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தான். ஆனால் தொடர்ச்சியாக மிக சிறந்த நிர்வாக இயக்குநர்களாக இந்தியர்கள் தேர்வாகி வருவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

Sundar Pichai and Satya Nadella 2018ம் ஆண்டிற்கான தலை சிறந்த இயக்குநர்களாக தேர்வு

ஏற்கனவே அடோப் நிறுவனத்தின் இயக்குநர் சாந்தனு நாராயண், ஹர்மான் இண்டெர்நேசனல் இயக்கத்தின் தலைவர் தினேஷ் பலிவால், மாஸ்டர்கார்ட்ஸ் அஜய் பங்கா ஆகியோர் தலை சிறந்த நிர்வாக இயக்குநர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டு சிறந்த நிர்வாக இயக்குநர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா முதலிடம் பிடித்திருக்கிறார். தி ஹோம் டிபோட் நிறுவனத்தின் இயக்குநர் க்ரைக் மெனெர் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க : நானும் தமிழகத்தில் பிறந்தவர் தான்.. அமெரிக்க பெண் எம்.பி. பெருமிதம்

29 இயக்குநர்கள் அடங்கிய பட்டியலில் , ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் 12வது இடத்திலும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மாஸ்க் 14வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் சூக்கர்பர்க் 22வது இடத்திலும், டெல் நிறுவனத்தின் மைக்கேல் டெல் 25வது இடத்திலும் உள்ளனர்.

தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று Comparably.com இணையத்தில் தரப்படும் கருத்துகளை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா முழுவதும் உள்ள 50,000 நிறுவனங்களில் வேலை செய்யும் 10 மில்லியன் நபர்களின் கருத்துகளை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close