Talk time offers Vs Combo recharge packs : ஒரு காலத்தில் ப்ரீபெய்ட் டாக் டைம் ப்ளான்கள் தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் வாங்கப்பட்ட ப்ளான்களாகும். ஜியோ வந்த பின்பு காம்போ பேக்குகளை தான் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகம் வாங்குகின்றார்கள்.
இதனால் தான் தற்போது அதிக அளவில் டாக் டைம் ஆஃபர்களை டெலிகாம் நிறுவனங்கள் வெளிவிடுவதில்லை. சில நிறுவனங்கள் மட்டும் அதற்கு விதி விலக்கு. இனிமேல் டாக் டைம் ப்ளான்களை நம்பலாமா வேண்டாமா என்பது குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை.
மினிமம் ரீசார்ஜ் பேக்குகளை மீண்டும் களம் இறக்கும் வோடபோன் மற்றும் ஏர்டெல்
மினிமம் ரீசார்ஜ் பேக்குகள் தற்போது பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பினை பெருவதில்லை. ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம் ரூ.100 மற்றும் ரூ.500 ரீசார்ஜ் பேக்குகளை மீண்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது.
ஆனால் அதற்கும் முன்பு ரூ.50 ரீசார்ஜ் திட்டத்தினை மீண்டும் அறிமுகம் செய்தது. ஆரம்ப காலகட்டத்தில் இது போன்ற சேவைகள் மூலமாகத்தான் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கையில் போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Talk time offers Vs Combo recharge packs : டாக் டைம் ரீசார்ஜ்களுக்கும் காம்போ ஆஃபர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன ?
500 ரூபாய்க்கு டாக் டைம் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு ரூபாய் 420.73-க்கு பேசிக் கொள்ளலாம். ஆனால் ரூ.500 காம்போ ஆஃபரை பயன்படுத்தினால் 90 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டட் தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகள, நாள் ஒன்றிற்கு 100 இலவச மெசேஜ்கள், மற்றும் 1.4ஜிபி டேட்டா ஆகிய சிறப்பு வசதிகளை தருகிறது இந்த காம்போ.
இதனால் டாக் டைம் ஆஃபர்களை விட சிறப்பு வாய்ந்ததாகவோ காம்போ பேக்குகள் கருதப்படுகிறது.
மேலும் படிக்க : உங்கள் ஸ்மார்ட்போன் டேட்டாவை எப்படி என்க்ரிப்ட் செய்வது ?