Advertisment

சூரிய கிரகணத்தை காண 11 ஆண்டுகள் காத்திருக்கணும்: வெறும் கண்களால் பார்க்காதீங்க!

சூரிய கிரகணத்தை இன்று பார்க்காவிட்டால், அடுத்த 11 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும், எனவே மிஸ் பண்ணிறாதீங்க மக்களே. தகுந்த கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு வசதியுடன் சூரிய கிரகணத்தை பாருங்க...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu to witness partial solar eclipse on June 21

Tamil Nadu to witness partial solar eclipse on June 21

Tamil Nadu to witness partial solar eclipse on June 21 : சூரிய கிரகணத்தை இன்று பார்க்காவிட்டால், அடுத்த 11 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும், எனவே மிஸ் பண்ணிறாதீங்க மக்களே. தகுந்த கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு வசதியுடன் சூரிய கிரகணத்தை பாருங்க...

Advertisment

சந்திர, சூரிய கிரகணங்கள் சாதாரண மக்களுக்கு வெறும் சாதாரண நிகழ்வுகள் தான். ஆனால் வானிலை ஆராய்ச்சியாளார்கள், ஆர்வலர்களுக்கு அது மிகப்பெரிய நிகழ்வு. அதுவும் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வரும் போது இதனை அவர்களால் மிஸ் செய்ய முடியாது.

வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 21ம் தேதி) அன்று பார்சியல் சோலார் எக்ளிப்ஸ் எனப்படும் பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) உருவாக உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் நிலவு பயணிக்கும் போது சூரிய கிரகணம் உருவாகிறது.

சூரிய கிரகணம் உச்சமடையும் போது சென்னை மக்களால் சூரிய கிரகணத்தை காண இயலும். சூரியனின் 34% பகுதி சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் (Executive Director of Tamil Nadu Science and Technology Centre) தலைமை இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் அறிவித்துள்ளார்.  காலை 10:22 மணிக்கு துவங்கி மதியம் 1:41 மணிக்கு நிறைவடைகிறது இந்த சூரிய கிரகணம். கிரகணம் உச்சத்தில் இருக்கும் நேரம் பகல் 11:58 மணியாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்று கடைசியாக சூரிய கிரகணம் உருவானது. இனி 11 வருடங்கள் (மே 2031) கழித்து உருவாகும் சூரியகிரகணத்தை தான் இந்தியர்களால் காண முடியும். 21ம் தேதி தோன்றும் இந்த கிரகணத்தை தமிழக மக்கள் மட்டுமின்றி சமோலி, டெஹ்ராடூன், ஜோஷிமத், குருக்‌ஷேத்ரா, சிர்ஸா மற்றும் சூரத்கர் ஆகிய இடங்களிலும் பார்க்க இயலும்.

எச்சரிக்கை

நேரடியாக சூரியனை வெற்றுக் கண்களால் காண கூடாது. தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண்பார்வை பறிபோகும் வாய்ப்பு உருவாகும். பைனாகுலர் அல்லது சிறிய அளவிலான டெலிஸ்கோப்களை பயன்படுத்தி நீங்கள் இந்நிகழ்வை காணலாம்.

மேலும் படிக்க : வறுமை, வயோதிகத்திற்கு மத்தியிலும் நேர்மை: கமலாத்தாள் பாட்டியுடன் ஒரு சந்திப்பு

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment