/tamil-ie/media/media_files/uploads/2019/01/Untitled-6.jpg)
Tata Sky new channel selection, tata sky customer, tata sky recharge debit card, டாடா ஸ்கை, டாடா ஸ்கை புதிய சேனல்
Tata Sky Channel Pack : ட்ராய் தற்போது புதிய கேபிள் டிவி சட்டத்தினை உருவாக்கியுள்ளது. அதன்படி அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் டிஷ் டிவி ஆப்பரேட்டர்கள் புதிய நடைமுறைக்கு வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய உரிமை அளிக்கிறது இந்த புதிய கேபிள் டிவி சட்டம்.
அந்த சேனல்களுக்கு தனியாக கட்டணங்கள் செலுத்துவது மட்டுமன்றி அடிப்படை கட்டணமாக நெட்வொர்க் கெபாசிட்டி ஃபீஸ் எனப்படும் NCF ரூபாய் 130 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
Tata Sky Channel Pack : டாட்டா ஸ்கை கனெக்சனில் விருப்பமான சேனல்களைப் பெறுவது எப்படி ?
டாட்டா ஸ்கையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டுமே வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சேனல்களை தேர்வு செய்ய இயலும்.
அதில் தேவையான மாற்றங்களை மொபைல் அப்ளிகேசன் மூலம் செய்ய இயலும்.
டாட்டா ஸ்கை இணையத்திற்கு செல்லவும். அதில் க்ளிக் டூ செலக்ட் என்ற பேனரை க்ளிக் செய்யவும்.
உங்களின் போன் நம்பர் அல்லது சப்ஸ்க்ரைபர் ஐடியை கொடுத்து லாக் இன் செய்து கொள்ளவும்.
அதற்கான ஓ.டி.பி உங்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அதனை உள்ளீடாக கொடுத்து அவர்களின் இணைய தளத்திற்உ செல்லவும்.
அதில் மூன்று ஆப்சங்கள் இருக்கும். ரெக்கமண்டெட் பேக், டாட்டா ஸ்கை பேக், மற்றும் அனைத்து சேனல்கள்.
முதல் இரண்டு பேக்குகளும் கஸ்டமைஸ்ட் செய்தது. செர்வீஸ் ப்ரைவடர்கள் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கியது.
உங்களுக்கு விருப்பமான தனித்ஹ்டனி சேனல்களை பெறூவதற்கு ஆல் சேனல்களை தேர்வு செய்யவும். ஒவ்வொன்றாக செய்த பின்பு, தேர்வு செய்யப்பட்ட சேனல்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான மொத்த விலை திரையின் மேற்பக்கத்ஹ்டில் காட்டும்.
அதனை க்ளிக் செய்து சப்மிட் கொடுத்து ப்ரசீட் செய்யவும்.
பின்பு உங்களின் சேனல்களுக்கு நீங்கள் பில் தொகை செலுத்தினால் போதும்.
மேலும் படிக்க : எம்.டபிள்யூ.சி. மாநாட்டில் வெளியிடப்பட்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் இவை தான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.