Tata Sky Channel selections : ட்ராய் அமைப்பு, டி.டி.எச். சேவைகள் மற்றும் கேபிள் டிவியின் விதிமுறைகளை மாற்றி அறிவித்துள்ளன. அதன் விதிமுறைகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது வாடிக்கையாளர்கள் எப்படி தங்களுக்கான சேனல்களை தேர்வு செய்வது என்பதில் மிகவும் குழப்பத்துடன் இருக்கின்றார்கள். டாட்டா ஸ்கையின் டி.டி.எச். மூலம் எப்படி சேனல்களை தேர்வு செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
சேனல்களை தேர்வு செய்வது எப்படி ?
டாட்டா ஸ்கை இணையத்தில் தற்போது வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்வு செய்த சேனல்களை மோடிஃபை செய்து கொள்ள இயலும். டாட்டா ஸ்கை இணையத்தில் மேனேஜ் பேக்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள்.
மொழி, பிராந்திரம் வாரியாக உங்களுக்கான சேனல்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். குரேட்டட் பேக் எனப்படும் அந்த பேக்கை நீங்கள் எளிதாக தேர்வு செய்து கொள்ள இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேக்கில் மாற்றங்களை மேற்கொள்வது எப்படி ?
நீங்கள் ஒரு பேக்கை ஏற்கனவே தேர்வு செய்திருந்தால் அதில் உங்களுக்கு தேவையான சேனல்களை ஆட் செய்து கொள்ளவும், நீக்கம் செய்யவும் இயலும்.
இதனை நீங்கள் உங்களின் டாட்டா ஸ்கை செயலியில் மிக எளிதாக செய்து முடிக்க இயலும்.
லாக் இன் செய்தவுடன் மேனேஜ் பேக்ஸ் என்ற ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் உங்களுக்கு விருப்பமான சேனல்களை இணைத்துக் கொள்ளலாம். வேண்டாத சேனல்களை நீக்கிக் கொள்ளலாம்.
தேர்வு செய்த பின்பு உங்களின் பில்லை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு விருப்பமான சேனல்களை நீங்கள் பார்த்துக் கொள்ள இயலும்.
Tata Sky Channel selections - கட்டண முறைகள்
நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் ரூ.130 மட்டும் மற்றும் 18% ஜி.எஸ்.டி என்பது அடிப்படைக் கட்டணம். அக்கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் இலவச சேனல்களை கண்டு களிக்கவும் இயலும். அதே போல் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எச்.டி மற்றும் எஸ்.டி. சேனல்களை கட்டணம் கட்டி பார்க்க இயலும்.
100 சேனல்களுக்கு மேல் தேர்வு செய்தால் 25 சேனல்களுக்கு 20 ரூபாய் என என்.சி.எஃப். கட்டணம் அதிகமாகும்.
மேலும் படிக்க : பி.எஸ்.என்.எல் வழங்கும் சிறப்பு சலுகைகள்