/tamil-ie/media/media_files/uploads/2019/01/Untitled-6.jpg)
Tata Sky new channel selection, tata sky customer, tata sky recharge debit card, டாடா ஸ்கை, டாடா ஸ்கை புதிய சேனல்
Tata sky discontinues multi-tv plan : ட்ராயின் புதிய கேபிள் டிவி கொள்கை காரணமாக டாட்டா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல், டிடிஎச் போன்ற நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக புதிய பேக்கேஜ்களை வழங்கி வந்தது. சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும் NCF கட்டணத்தை தள்ளுபடி செய்தது.
தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது டாட்டா ஸ்கை நிறுவனம். அதில் வருகின்ற 15ம் தேதியில் இருந்து மல்ட்டி டிவி பேக்கினை கைவிடுவதாகவும், ஒவ்வொரு இணைப்பிற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மல்ட்டி டிவி சேனல்களை தேர்வு செய்தால் அதற்காக சலுகைகள் அளிக்கின்றோம் என்று கூறி இருந்த போதிலும் டி.டி.எச் ஆப்பரேட்டர்களுக்கு இந்த செய்தி முறையாக போய் சேராததே காரணம் என்கிறது டாட்டா ஸ்கை.
வருகின்ற ஜூன் 15ம் தேதியில் இருந்து இந்த முறை மாறுவதால், கொடுக்கப்பட்ட சலுகைகளும் முற்றிலும் நிறுத்தப்படுவாதாக அறிவித்துள்ளது டாட்டா ஸ்கை நிறுவனம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் புதிய திட்டங்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : சிறப்பு தள்ளுபடிகளை அள்ளி வழங்கி அசத்தும் அமேசான்
டாட்டா ஸ்கை உருவாக்கியுள்ள இந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி ஏர்டெல், டிஷ் டிவி, மற்றும் இதர டி.டூ.எச். சேவை நிறுவனங்கள் சலுகைகள் அளித்து மிகவும் சிறப்பான ப்ளான்களை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.