Advertisment

Amazon Fab Phones Fest 2019 : ஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ மற்றும் 6T - க்காகவே ஆஃபர் வழங்கும் அமேசான்

இந்த அதிரடி தள்ளுபடி ஜூன் 10 முதல் 13ம் தேதி வரை மட்டுமே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon Fab Phones Fest 2019 Best deals offers OnePlus 7, 7 Pro, 6T, iPhone XR, Mi A2,

Amazon Fab Phones Fest 2019 Best deals offers OnePlus 7, 7 Pro, 6T, iPhone XR, Mi A2,

Amazon Fab Phones Fest 2019 Best deals offers : அமேசான் நிறுவனம் மீண்டும் சூப்பரான ஆஃபரை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களை 40% தள்ளுபடியுடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த அதிரடி தள்ளுபடி ஜூன் 10 முதல் 13ம் தேதி வரை மட்டுமே.

Advertisment

ஆப்பிள் XR, சாம்சங் கேலக்ஸி S10, கேலக்ஸி M20, ஹானர் 10 லைட், ஹானர் ப்ளே, ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, ஒன்ப்ளஸ் 6டி, ஓப்போ F11 ப்ரோ, விவோ வி15 ப்ரோ போன்ற போன்களை நீங்கள் இந்த ஆஃபரில் பெற்றிடலாம்.

மேலும் படிக்க : ஜூன் 19ல் வெளியாகும் ஆசூஸ் 6Z : சிறப்பம்சங்கள் என்னென்ன ?

Samsung Galaxy S10

8GB/128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் ஆரம்ப விலை ரூ. 66,900 ஆகும். தற்போது தள்ளுபடி விலையில் 61,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போன்று 8GB/512GB வேரியண்ட் போனின் விலை 84,900 ரூபாய் ஆகும். தற்போதைய தள்ளுபடி விலை ரூ. 76,900 ஆகும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்கும் போது 15,150 ரூபாய் வரை தள்ளுபடி விலைக்கு நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : சாம்சங் கேலக்ஸி S10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

OnePlus 7 and OnePlus 7 Pro

இந்தியாவிற்கு மிக சமீபத்தில் இந்த இரண்டு போன்களும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த இரண்டு போன்களுக்கும் இன்ஸ்டாண்ட் டிஸ்கௌண்டினை வழங்கியுள்ளது அமேசான்.  2 போன்களுக்கும் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. டெபிட் கார்ட்கள் மூலம் இந்த போனை நீங்கள் வாங்கினால் ரூ. 2000 தள்ளுபடி பெற இயலும். எஸ்.பி.ஐ. ரூபேய் கார்ட்கள் (SBI Rupay Cards) மூலம் இந்த தள்ளுபடியை நீங்கள் பெற இயலாது.

இந்த போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தகவல்களைப் படிக்க

OnePlus 6T

ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போன், ஒன்ப்ளஸ் 7 மற்றும் 7 ப்ரோ விற்பனைக்கு வந்த பின்பு முதல்முறையாக தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 8GB RAM + 128GB வேரியண்ட் போனின் தள்ளுபடி விலை ரூ. 27,999 ஆகும். 8GB RAM + 256GB போனின் தள்ளுபடி விலை 31,999 ஆகும். இந்த தள்ளுபடி விலை போன் ஸ்டாக் இருக்கும் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்லாரன் போனின் (10GB RAM and 256GB )தள்ளுபடி விலை 41,999 ஆகும்.

மேலும் படிக்க : வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யுமா ஒன்ப்ளஸ் 6T?

iPhone XR and iPhone X

ஐபோன் XR 64ஜிபி போனின் விலை இந்த தள்ளுபடியில் ரூ. 58,999க்கு விற்பனையாகின்றது. மேலும் iPhone X 64ஜிபி போனின் விலை 67,999க்கு விற்பனையாகி வருகிறது.

Xiaomi Mi A2

இந்த போன்களுக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு தள்ளுபடியை வழங்கியுள்ளது அமேசான் நிறுவனம். 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 10,999 மட்டுமே. அதே போன்று 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 15,999 ஆகும்.

Honor 10 Lite

ஹானர் 10 லைட் போனின் இரண்டு வேரியண்ட்டுகளுக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான்.  3GB RAM + 32GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 9999 மட்டுமே. மேலும் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 11,999 ஆகும்.

ஹானர் 10 லைட் போனின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Samsung Galaxy M20

இந்த சீரியஸில் வெளியாகியுள்ள இரண்டு வேரியண்ட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.  3GB/32GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.10,990 ஆகும். ஆனால் சிறப்புத்தள்ளுபடியில் வாடிக்கையாளர்கள் ரூ. 9,990-க்கு இந்த போனை வாங்கிக் கொள்ளலாம். அதே போன்று ரூ. 12,990க்கு விற்பனையாகும் 4GB/64GB வேரியண்ட் போனை நீங்கள் ரூ. 11,990க்கு வாங்கிக் கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்20 போனின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை 

இது மட்டுமல்லாமல் விவோ வி15, விவோ வி15 ப்ரோ, ஓப்போ F11 ப்ரோ, ஐபோன் 6S, விவோ நெக்ஸ், நோக்கியா 8.1, ஹானர் ப்ளே, ஹூவாய் பி30 லைட், ஹானர் வியூ 20, சாம்சங் கேலக்ஸி ஏ50 போன்ற போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment