/tamil-ie/media/media_files/uploads/2019/03/tata-sky.jpg)
Tata Sky announces discounts
Tata Sky DTH offers 200 channels in NCF slabs : ட்ராய் அமைப்பின் புதிய கேபிள் டிவி கொள்கைகளுக்கு பின்னால் இந்தியாவில் டி.வி. பார்ப்பது என்பதும், அதற்கான சேனல்களை தேர்வு செய்வது என்பதும் கொஞ்சம் குளறுபடியாக மாறி, தற்போது சரியாக அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
Tata Sky DTH offers 200 channels in NCF slabs
டி.டி.எச் சேவை நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை, சேனல்களை பேக்குகளாக அறிமுகம் செய்தது. எந்த பேக்குகளை தேர்வு செய்தாலும், அதற்கு அடிப்படை கட்டணமாக NCF - கட்டணமாக ரூ. 153 கட்ட வேண்டும். இலவச சேனல்களை தேர்வு செய்தால் வாடிக்கையாளர்கள் இந்த பணத்திற்கு மேல் மற்ற எந்த கட்டணமும் கட்ட தேவையில்லை.
சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக என்.சி.எஃப் கட்டணங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் டாட்டா ஸ்கை ஒரு மாறுதலுக்காக என்.சி.எஃப் கட்டணத்தில் அதிக சேனல்களை வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு புதிய வசதிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஏற்கனவே 150 சேனல்களை இந்த கட்டணத்தில் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். தற்போது அந்த சேனல்களின் எண்ணிக்கையை 200-ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறது.
மேலும் படிக்க : ஆண்ட்ராய்ட் க்யூ அப்டேட்டினை பெறும் ஸ்மார்ட்போன்கள்
இந்த 200 சேனல்களும் எஸ்.டி. ரெசலியூசன் கொண்டவை. இந்த 200 சேனல்களில் 29 சேனல்கள் டிடி - சேனல்கள் ஆகும். 166 சேனல்கள் எப்.டி.ஏ சேனல்கள் மற்றும் டாட்டா ஸ்கையின் 5 சர்வீஸ் சேனல்கள் இதில் அடக்கம். டாட்டா ஸ்கை தர்சன் எனப்படும் சேனல் கோவில்களில் இருந்து நேரலைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.