Advertisment

Electric Bikes : அல்ட்ரா மார்டன் பெண்களுக்காக அசத்தலான 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Electric Scooters for Women India : இதில் நல்ல விசயம் என்னவென்றால் இதனை ஓட்ட நீங்கள் லைசென்ஸ் வாங்கவோ, ஆ.டி.ஓ ஆபிஸில் ரெஜிஸ்டர் செய்யவோ வேண்டியதில்லை

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Techo Electra Emerge Electric Scooter, Techo Electra Launches 3 electric bikes

Techo Electra Emerge Electric Scooter

Techo Electra Launches 3 electric bikes :  இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை துரிதப் படுத்தும் முயற்சியில் பல்வேறு சலுகைகளை வழங்கி  நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மிக சமீபமாக ஹூண்டாய் நிறுவனத்தின் கோனார் என்ற கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அதே வரிசையில் டெக்கோ எலக்ட்ரா என்ற நிறுவனம் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது. நியோ,  ராப்டர் மற்றும் எமெர்ஜ் ஆகிய மூன்று ஸ்கூட்டர்கள் தற்போது அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் படிக்க : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை…

Techo Electra Launches 3 electric bikes :  வடிவமைப்பு

நியோவும் ரெப்டாரும் ஸ்போர்ட்டி டிசைனில் வெளியாக, எமெர்ஜ் மட்டும் வெஸ்பாவின் பழைய வடிவமைப்பில் வெளியாகியுள்ளது. எல்.ஈ.டி ஹெட்லேம்ப், ஃபுல் டிஜிட்டல் டிசைன், யூ.எஸ்.பி.சார்ஜிங் போர்ட் என்று சில பொதுவான சிறப்பம்சங்கள் இந்த மூன்று ஸ்கூட்டர்களிலும் காணப்படுகிறது.

இந்த மூன்று வாகனங்களுக்கும் பி.எல்.டி.சி. மோட்டார் தான் பவரை வழங்குகிறது. எமெர்ஜ் ஸ்கூட்டர் 48V 28Ah லித்தியம் ஐயான் பேட்டரிகளை கொண்டிருக்க, நியோ மற்றும் ரேப்டா ஸ்கூட்டர்கள் முறையே 12V 20Ah மற்றும் 12V 32Ah பேட்டரிகளை கொண்டிருக்கின்றன. ரேப்டார் மற்றும் நியோ சார்ஜ் ஆவதற்கு ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஆகும். எமெர்ஜ் 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

மேலும் படிக்க : 3 அசத்தல் நிறங்களில் வெளியானது ஹார்லே டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்… விலை ரூ.20.56 லட்சம்!

எமெர்ஜின் பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் செய்யவும் இயலும். டெலஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், இரட்டை ஷாக் அப்சர்பெர்கள் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. அதே போன்று டிஸ்க் யூனிட் முன்பக்கத்திலும், ட்ரம் யூனிட் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நல்ல விசயம் என்னவென்றால் இதனை ஓட்ட நீங்கள் லைசென்ஸ் வாங்கவோ, ஆ.டி.ஓ ஆபிஸில் ரெஜிஸ்டர் செய்யவோ வேண்டியதில்லை.. இந்தியா முழுவதும் 50 இடங்களில் இந்த வாகனத்திற்கான விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

Techo Electra Scooter prices

நியோவின் விலை ரூ.43,000 -ல் இருந்து அறிமுகமாகிறது. ரேப்டாரின் விலை 60,771க்கு அறிமுகமாகிறது. எமெர்ஜின் விலை ரூ. 72247 ஆகும்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் எது தெரியுமா? ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது RV400

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment