scorecardresearch

டிக்-டாக்குக்கு போட்டியாக புது செயலியை அறிமுகம் செய்யும் முயற்சியில் கூகுள்

ஏற்கனவே சீனாவில் இயங்கி வரும் வெய்போ நிறுவனத்திற்கும் இந்த ஃபையர் ஒர்க் நிறுவனத்தின் மீது ஒரு கண் என்பது குறிப்பிடத்தக்கது.

Tiktok competitor Google may acquire video platform app Firework
Tiktok competitor : Google may acquire video platform app Firework

Tiktok competitor Google may acquire video platform app Firework : திரும்பிய பக்கமெல்லாம் ஒரே டிக்டாக் மயம் தான். யாரைக்கேட்டாலும் டிக்டாக்கில் வீடியோ ஷேர் செய்வதை ஒரு பழக்கமாக, அன்றாட வாழ்க்கையாகவே மாறிவிட்டது. உலக அளவில் 500 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பினை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்களின் பிராண்ட் கீழ் இதே போன்ற ஒரு செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது டிக்டாக்கிற்கு போட்டியாக சரியான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஏற்கனவே வீடியோ ப்ளாட்ஃபார்மில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஃபயர் ஒர்க் என்ற நிறுவனத்தை வாங்க உள்ளது கூகுள். இவர்களின் முக்கிய இலக்காக லிக்டின் மற்றும் ஸ்நாப்சாட் பயனாளர்களை நிர்ணயித்து அதற்காக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஃப்ண்ட்ரைஸிங் மூலமாக 100 மில்லியன் டாலர்களை இந்த செயலியில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் அது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனாவில் இயங்கி வரும் வெய்போ நிறுவனத்திற்கும் இந்த ஃபையர் ஒர்க் நிறுவனத்தின் மீது ஒரு கண் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ரூ. 130க்கு 150 சேனல்களை வழங்கும் கேபிள் டிவி… டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு?

சீனாவின் பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமே இந்த டிக்டாக் செயலி. கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனத்தின் மதிப்பு 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதன் காரணமாகவே வீடியோ ஆப்பில் அடி எடுத்து வைக்கும் யோசனையில் இறங்கியுள்ளது கூகுள்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Tiktok competitor google may acquire video platform app firework