/tamil-ie/media/media_files/uploads/2020/05/tik-tok-759.jpg)
Tiktok says it will stop its operation in Hong Kong soon : இந்திய மற்றும் சீன எல்லைகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகின்ற காரணத்தால் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்திய அரசு. டிக்டாக், ஹெலோ, ஷேர் இட் போன்ற பல்வேறு செயலிகள் இதனுள் அடக்கம். இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த செயலிகள் உள்ளது என்று இந்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஹாங்காங்கிலும் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹாங்காங் தீவை சீனா தன்வசப்படுத்த பெரிதும் முயன்று வருகிறது. இதற்காக சட்ட திருத்ததில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது சீன அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : டிக்டாக் செயலி தடை : பெரும் பாதிப்பை சந்திக்கும் பைட்-டான்ஸ் நிறுவனம்!
முன்பு போல் இல்லாமல் போராட்டங்கள் அனைத்தும் புது களங்கள் கண்டிருப்பத்தால் மக்கள் அதனை பயன்படுத்தி தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற செயலிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். டிக்டாக் செயலியால் ஏதேனும் நிகழலாம் என்று உணர்ந்த டிக்டாக் நிறுவனம் தற்போது தங்களின் செயல்பாட்டை ஹாங்காங்கில் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தவிர, இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.