தீபாவளி 2018 பட்ஜெட் போன்கள் : தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் பெருவெள்ளம் ஒவ்வொரு கடையினையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நகை, புதிய ஆடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் இந்த தீபாவளி போனஸில் வாங்க அனைவரும் அதீத மும்பரம் காட்டிக் கொண்டிருக்கும் நேரம் இது.
பட்ஜெட் விலையில், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக போன்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்களா நீங்கள். அப்போது உங்களின் தேர்வு இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
தீபாவளி 2018 பட்ஜெட் போன்கள் : ஸியோமி ரெட்மி ஒய் 2 (ரூ. 9,999)
ஸியோமி ரெட்மி எஸ் 2 போனின் ரீவெர்ஷன் மொபைல் போன் இது. கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனின் ஃப்ர்ண்ட் கேமரா 16 மெகாபிக்சல் ரெசல்யூசனைக் கொண்டிருக்கின்றது. சிறந்த செல்பி ஸ்மார்ட் போனின் விலை ரூ. 9,999ல் இருந்து தொடங்குகின்றது.
ரியல்மீ 2 - விலை (ரூ.8990)
நோட்ச் ஸ்க்ரீனுடன் வெளியாகும் முதல் பட்ஜெட் போன் இது தான். நானோ ஸ்கேல் கம்போஸிட் மெட்டிரியல்களால் உருவாக்கப்பட்ட போன் இது. கறுப்பு, நீலம், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளது. பேட்டரியின் திறன் 4230 mAh ஆகும். 44 மணி நேரம் இந்த செல்போனை இயங்க வைக்கும் திறன் கொண்டது இந்த பேட்டரி. இரட்டை பின்பக்க கேமரா (13 எம்.பி மற்றும் 2 எம்.பி) மற்றும் ஒரு 8 எம்.பி செல்பி கேமராவையும் கொண்டுள்ளது இந்த போன். இந்த போன் குறித்த அனைத்து சிறப்பம்சங்களையும் தெரிந்து கொள்ள
ரியல்மீ 2
ஹானர் 7S - விலை (ரூ. 6,999)
ஹானர் 7S ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் போனாகும். நீலம், கருப்பு, மற்றும் கோல்டன் நிறங்களில் வெளிவரும் இந்த போனின் விலை வெறும் 6,999 ரூபாய் மட்டுமே. 5.45 இன்ச் எச்.டி. மற்றும் டி.எஃப்.டி திரையுடன் வருகிறது இந்த ஹானர் போன். ரெசலியூசன் 1440 x 720 பிக்சல்கள். மீடியாடெக் MT6739 ப்ரோசஸ்ஸருடன் வெளியாகும் இந்த போனின் இண்டெர்நெல் ஸ்டோரேஜ் 16 ஜிபி ஆகும். 2 ஜிபி RAM ஐக் கொண்டுள்ளது. இந்த போன் பற்றிய மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள
Honor 7S
ஹானர் 7சி (Honor 7C) - விலை ரூ. 9999
ஹானர் போன்களில் மற்றொருமொரு மாடல் இந்த பட்ஜெட் விலைக்குள் வருகிறது. 5.99 இன்ச் அளவுள்ள இந்த போனின் 3ஜிபி RAM மற்றும் 32ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட வேரியண்ட்டுகளின் விலை ரூ. 9999ல் இருந்து ஆரம்பமாகிறது. இந்த போனின் ரெசலியூசன் 1440 x 720 ஆகும். குவால்கோம் ஸ்நாப்ட்ராகனின் 450 சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய் 8.0 ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மீ 1
க்ளாஸ் ஃபைபர், டையமண்ட் கட் ஃபினிஷ் என்று அசத்தலாக வெளிவௌம் இந்த போனின் விலையும் ரூ. 9,990 தான். 6 அங்குல அளவு கொண்ட இந்த போனின் திரை ஃபுல் எச்.டி மற்றும் ஐபிஎஸ் பேனலால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2160x1080 ரெசலியூசன் கொண்டிருக்கும் இந்த போன் மீடியாடெக் MT6771 என்ற சிப்செட்டால் இயக்கப்படுகிறது. ColorOS 5.0 இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த போன். இதன் பேட்டரி பவர் 3410 mAh ஆகும். தீபாவளி 2018 பட்ஜெட் போன்கள் உங்களின் தேர்வு எது என முடிவு செய்திவிட்டீர்களா ?
மேலும் படிக்க : பட்ஜெட் ரூ. 15,000 : இந்த தீபாவளிக்கு என்ன ஸ்மார்ட்போன் வாங்கலாம் ?