Top 5G Smartphones 2019 : அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 25 முதல் 28 தேதி வரை, பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய மொபைல் குறித்த மாநாடு மற்றும் நிகழ்ச்சி இது என்பதால் புதிதாக வெளியாகும் போன்கள் குறித்த அறிமுகங்களை நிறுவனங்கள் வெளியிடுவது வழக்கம்.
தற்போது 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கும் போன்களை இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ய செல்ஃபோன் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக கொரியாவின் தி கொரியா ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் தங்களின் 5ஜி போன்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : ஐபோன்கள் மட்டும் ப்ரீமியம் போன்கள் இல்லை
எல்.ஜி நிறுவனத்தின் புதிய 5ஜி போனை வருகின்ற மே மாதம் கொரியாவிலும், அமெரிக்காவிலும் வெளியிட இருப்பதாக ஹெரால்ட் அறிவித்துள்ளது. எல்.ஜி. 5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய போன் பற்றிய தகவல்களை இது வரை வெளியிடவில்லை.
ஆனால் ஜி7 தின்க்யூ ( G7 ThinQ ) போனின் அப்டேட்டினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் குவால்கோமின் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் மற்றும் ஸ்நாப்ட்ராகன் X50 மோடம் பயன்படுத்தப்பட உள்ளது.
ஹவாய்யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், 5ஜி தொழில்நுட்பத்திற்காகவே புதியதாக ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும் படிக்க : ப்ரோசசர் உலகில் அடி எடுத்து வைக்கும் ஹூவாய் நிறுவனம்
ஒன்ப்ளஸ் நிறுவனமும் தன்னுடைய 5ஜி போனை அடுத்த வருடம் ஐரோப்பாவில் வெளியிட உள்ளதாக உறுதி அளித்துள்ளது.
ஓப்போ நிறுவனம் மற்றும் ஹூவாய் நிறுவனங்களும் தங்களின் புதிய போன்களை அறிமுகப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
சாம்சங்கின் கேலக்ஸி F சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் 5ஜி போன் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பிப்ரவரி மாதம் தான் எதிர்பார்க்க இயலும்.
மேலும் படிக்க : சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன் லான்ச்சிற்கு தயார்
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Top 5g smartphones 2019 what are 5g smartphones will be launched in mobile world congress
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி