scorecardresearch

நீங்க 5G-க்கு மாறிட்டீங்களா? கம்மி விலையில் பெஸ்ட் 5G போன்கள் இவைதான்!

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பல இ-காமர்ஸ் தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5G போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை தள்ளுபடி விலையில் வழங்க தீபாவளி விற்பனையை நடத்தி வருகின்றன.

நீங்க 5G-க்கு மாறிட்டீங்களா? கம்மி விலையில் பெஸ்ட் 5G போன்கள் இவைதான்!

இந்தியாவின் மொமைல் இன்டர்நெட பயன்பாட்டாளர்களின் காத்திருப்புக்கு தற்போது முடிவு கிடைத்துவிட்டது. அதிவேக இன்டர்நெட் வசதியாக 5ஜி சேவை தற்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. ஆனால் இந்த நெட்வொர்க் பயன்பாட்டை முழுவதுமாக அனுபவிக்க 5ஜி ஸ்மார்ட்போன் தேவை. அதை வாங்குவதற்கு இதுவே சரியான சேரம்.

தற்போது நல்ல விஷயம் என்னவென்றால், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பல இ-காமர்ஸ் தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5G போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை தள்ளுபடி விலையில் வழங்க தீபாவளி விற்பனையை நடத்தி வருகின்றன. இதில் ரெட்மீ நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G) போகோ எம்4 5ஜி ( Poco M4 5G) சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13) என பல வகையாக 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஆன்லைனில் விலை குறைந்துள்ளது.

இந்த 5ஜி சாதனங்கள் இந்தியாவில் ரூ.15,000க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. ஆனால் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்களுக்கு 5ஜி ஸ்மார்ட் போனின் இந்த விலைக்குறைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சில சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்

ரெட்மீ நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G)

ரெட்மீ நோட் 11டி 5ஜி  (Redmi Note 11T 5G) ரூ.15,000க்கு கீழ் உள்ள சிறந்த 5G போன்களில் ஒன்றாகும். சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13) உடன் ஒப்பிடும்போது அதிக ரெசியூலேஷன் மற்றும் அப்டேட்கள் வீதத்திற்கான ஆதரவுடன் 6.6 அங்குல டிஸ்பிளே FHD+ ரெசியூலேஷன் இயங்குகிறது. 90Hz இல் புதுப்பிக்கிறது.  மேலும் ஸ்மோதர் ஸ்க்ரோலிங் அனுபவத்தை தருகிறது.

ஹூட்டின் கீழ் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் உள்ளது, இது சாஃப்ட்டான பொது செயல்திறனை வழங்கும் திறன் கொண்டது. ஸ்மார்ட்போன் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக உளளது. மேனிபேக்சிரிங் தரம் மிகவும் நன்றாக உள்ளது. கேமரா மற்றும் பிலாஷ் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக உள்ளது. சிறந்த ஒளி நிலைகளில் சமநிலையான டைனமிக் வரம்புடன் மக்கள் நல்ல அளவிலான தெளிவு மற்றும் விவரங்களைப் பெறுவார்கள்.

கைபேசியில் சிறந்த ஆடியோ வெளியீட்டிற்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன. ஒரு வழக்கமான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. வேகமான 33W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இது வேகமான விகிதத்தில் பேட்டரியை சார்ஜ் செய்ய உதவும். ரெட்மீ நோட் 11டி 5ஜி  (Redmi Note 11T 5G) போன் ரூ.1,000 தள்ளுபடி கூப்பனையும் பயன்படுத்தினால், அமேசானில் 128ஜிபி இன்டனல் மெமரியுடன்  ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் : 116 போன்களில் நேரடியாக 5G பயன்படுத்தலாம்? எந்ததெந்த போன்கள் தெரியுமா?

போக்கோ அ4 5ஜி (Poco M45G)

ரூ.11,000க்கும் குறைவான விலையில் 5ஜி போனை விரும்புவோருக்கு போக்கோ அ4 5ஜி (Poco M4) ஒரு நல்ல சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 700 (MediaTek Dimensity 700) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல்போன்,  அடிப்படைக் வசதிகளை எளிதாகக் கையாள உதவுகிறது. 5,000mAh பேட்டரி உள்ளது, எனவே ஃபோன் லேசான பயன்பாட்டுடன் ஒரு வெகுநாட்கள் லைஃப் கிடைக்கும். இதனுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சார்ஜர் வழங்கியுள்ளது, இது பட்ஜெட் ஸ்மார்ட்போனாக கருதுவது நல்லது. கேமரா போட்டிக்கு இணையாக உள்ளது. 6.58-இன்ச் முழு HD+ டிஸ்பிளே மிகவும் துடிப்பானது மற்றும் ஊடக நுகர்வுக்கு போதுமானது.

போக்கோ அ4 5ஜி (Poco M45Gphone) 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது ப்ளிப்கார்ட்டில் (Flipkart) Rs10,999 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி  (Samsung Galaxy M13 5G)

பல 5ஜி சாம்சங் போன்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன, அதில் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜியும் ஒன்றாகும். அமேசானில் ரூ.12,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி போன். போதுமான அளவு பேட்டரி மற்றும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடுபவர்கள் இந்த போனை வாங்கலாம். 5,000mAh பேட்டரி மற்றும் 6.5 இன்ச் LCD டிஸ்பிளேவுடன் கிடைக்கிறது. பேனல் HD+ தெளிவுத்திறனில் இயங்குகிறது.

இந்த பட்ஜெட் சாம்சங் ஃபோன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்பைப் பயன்படுத்துகிறது, 15W சார்ஜர் உள்ளது.. கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த விலையில் நல்ல புகைப்படங்கள் மற்றும் வடியோக்களை பதிவு செய்யலம். இது பகலில் வண்ணங்களுடன் போதுமான விரிவான புகைப்படங்களை வழங்க முடியும்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி  (Samsung Galaxy M13 5G) ஃபோன் விலை தற்போது அதன் அசல் விலையான ரூ.13,999-லிருந்து ரூ.11,999-லிருந்து தொடங்குகிறது.

இதையும் படியுங்கள் : 116 போன்களில் நேரடியாக 5G பயன்படுத்தலாம்? எந்ததெந்த போன்கள் தெரியுமா?

ரியல்மீ 9ஐ 5ஜி (Realme 9i 5G)

ரியல்மீ 9ஐ 5ஜி Realme 9i 15,000 ரூபாய்க்கு கீழ் உள்ள மற்றொரு நல்ல 5G ஃபோன் ஆகும். இது ஒரு ஆல்-ரவுண்டர் ஃபோன் என்று சொல்லலாம். 6.6-இன்ச் FHD+ டிஸ்பிளே 90Hz இல் புதுப்பிக்கிறது. Mediatek இன் Dimensity 810 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மற்றும் போதுமான பெரிய 5,000mAh பேட்டரி. இருப்பினும், 18W சார்ஜரை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இது மேலே குறிப்பிட்டுள்ள Redmi Note 11T 5G ஸ்மார்ட்போனில் நீங்கள் பெறுவதை விட மிகக் குறைவு. இது தவிர, இந்த Realme ஃபோன் அதன் விலை வரம்பில் சிறந்த கேமரா அமைப்பைக் பெறவில்லை.மேலும் மக்கள் Samsung Galaxy M13 அல்லது Redmi Note 11T உடன் சிறந்த செயல்திறனைப் பெறுவார்கள். Realme 9i 5G ஃபோன் விலை 13,499 ரூபாயில் தொடங்குகிறது, இது இதுவரை இல்லாத குறைந்த விலையாகும். மக்கள் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மூலம் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Top best 5g smartphone under 15000 in india check out