/tamil-ie/media/media_files/uploads/2018/12/airtel-jio-vodafone-copy-1-1.jpg)
Reliance Jio hikes mobile tariff rates
Top prepaid plans under Rs 200 : வோடபோன், ஜியோ, மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் மத்தியில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பிளான்கள் வழங்குவதில் கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.
சமீபத்தில் நாளொன்றிற்கு 1.4ஜிபி டேட்டாவிலிருந்து 1.5ஜிபி டேட்டாவினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது ஏர்டெல் மற்றும் வோடஃபோன்.
Top prepaid plans under Rs 200 - சிறந்த ப்ளான்களை வழங்கும் நிறுவனம் எது ?
Airtel Rs 199 prepaid recharge plan
3ஜி / 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 1.4 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 1.5ஜிபி டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல். இதன் மூலம் 42ஜிபி டேட்டாவினை 28 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இலவச லோக்கல் மற்றும் தேசிய அழைப்புகளை வழங்குகிறது இந்த திட்டம். நாள் ஒன்றிற்கு 100 குறுஞ்செய்திகளை இலவசமாக பெற்றிடலாம்.
Reliance Jio Rs 198, Rs 149 prepaid recharge plans
ஜியோ மாதாந்திர சேவைகளாக இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது. 28 நாட்களுக்கு 56ஜிபி டேட்டாவினை வழங்குகிறது ஜியோ. நாளொன்றிற்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நாள் ஒன்றிற்கு 100 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்பலாம்.
149 ரூபாய்க்கு மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. அதில் நாள் ஒன்றிற்கு வாடிக்கையாளர்கள் 1.5ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ள இயலும். வேலிடிட்டி 28 நாட்கள்.
Vodafone Rs 199 prepaid plan
1.5ஜிபி டேட்டாவை நாளொன்றிற்கு வழங்குகிறது வோடஃபோன். மேலும் நாள் ஒன்றிற்கு 100 இலவச மெசேஜ்களை அனுப்பிக் கொள்ளலாம்.
உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் நாளொன்றிற்கு 250 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை பேசிக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.