Trai Channel Selector App User guideline : புதிய கேபிள் டிவி சட்டம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வழிவகை செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
தற்போது வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் வகையிலும், சேனல்கள் மற்றும் அதற்கான கட்டணங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Trai Channel Selector App User Guideline
இந்த அப்ளிகேசன் ட்ராய் இணைய தளத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் தங்களுக்கு பிடித்த சேனல்களுக்கான முறையான கட்டணம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : கேபிள் டிவி இணைப்பு மற்றும் இதர கட்டணங்கள்
எப்படி பயன்படுத்துவது ?
கெட் ஸ்டார்ட்டெட் பட்டனை க்ளிக் செய்யவும். அதில் உங்களின் பெயர், அலைபேசி எண், சர்வீஸ் ப்ரொவைடர் டீட்டைல்ஸ் ஆகியவற்றை உள்ளீடாக அளிக்கவும். உங்களின் மாநில என்ன என்பதை கேட்கும். இந்த அடிப்படையில் உங்களின் மொழி, மற்றும் உங்களுக்கு விருப்பமான சேனல்களை ட்ராய் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
அதன்பின்பு, நியூஸ், மியூசிக், பக்தி, விளையாட்டு என்று உங்களுக்கு விருப்பமான தேர்வு என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக ஸ்டாண்டர்ட் அல்லது எச்.டியில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்கு பின்பு தான் சேனல் செலக்டார் வேலை செய்யத் துவங்கும். இலவச சேனல்களில் இருந்து உங்களின் தேர்வை ஆரம்பியுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த சேனல்களின் எண்ணிக்கையை சேனல்கள் செலக்டட் ஏரியாவில் பார்த்துக் கொள்ளலாம்.
அதே போல் அதற்கான கட்டணங்களையும் அதில் அறிந்து கொள்ள இயலும். மொத்தம் 550 இலவச சேனல்கள் இருக்கின்றன. இலவச சேனல்களை செலக்ட் செய்த பின்பு பே – சேனல்களை தேர்வு செய்யலாம்.
எச்.டி மற்றும் எஸ்.டி சேனல்களை வழங்கி வருகின்றனர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள். இருக்கும் சேனல்கள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்பு தங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இறுதியாக சேனல் பொக்கே லிஸ்டில் சென்று இருக்கும் பேக்குகள் குறித்த விபவரங்களை அறிந்து கொள்ளவும். அதில் மை செலக்சன் பகுதியை தேர்வு செய்து உங்களின் தேர்வை ஓவர் வியூ செய்து கொள்ளலாம்.
கட்டண சேனல்கள் எத்தனை, இலவச சேனலகள் எத்தனை, கட்டாய சேனல்கள் எத்தனை என்பதை நீங்கள் அந்த ஓவர் வியூவில் கண்டு கொள்ள இயலும். இந்த முறையின் மூலம், நீங்கள் மாதம் மாதம் கட்டும் கேபிள் டிவிக்கான கட்டணங்களை பெருவாரியாக குறைத்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் முடிவு செய்த பின்பு, அதனை பிரிண்ட் செய்து உங்களின் கேபிள் டிவி ப்ரொவைடர்களிடம் கொடுத்துவிட்டால் உங்கள் பங்கு வேலை முடிவுற்றது. இதனை நீங்கள் கொடுத்துவிட்டால், சில மணி நேரங்களில் உங்களுக்கு தேவையான சேனல்களை உங்கள் கேபிள் டிவி ஆப்பரெட்டர்கள் ஆக்டிவேட் செய்துவிடுவார்கள்.