ட்ராய் உருவாக்கிய புதிய கேபிள் டிவி சட்டம் எப்படி இயங்குகிறது ?

அனைத்து சிக்னல்களும் என்கிரிப்ட் செய்யப்பட்டு, செட்-டாப்-பாக்ஸில் டீகிரிப்ட் செய்யப்படும்

அனைத்து சிக்னல்களும் என்கிரிப்ட் செய்யப்பட்டு, செட்-டாப்-பாக்ஸில் டீகிரிப்ட் செய்யப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TRAI New Cable TV rules, TRAI Channel Selector Application

TRAI Channel Selector Application

R.S.Sharma

TRAI New Cable TV rules : வாடிக்கையாளர் தான் ராஜா. ராஜாவிற்கு நல்ல வாழ்வுண்டு, எப்போது, அவன் கையில் ராஜாங்கம் இருக்கும் போது.

Advertisment

இந்த நாள் வரை, நம் வீட்டு டிவியில் என்ன சேனல் நாம் பார்க்க வேண்டும் என்பதை கேபிள் டிவி ப்ரொவைடர்களும், விநியோகஸ்தர்களுமே முடிவு செய்கிறார்கள். ஆனால் தற்போது அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தை வாடிக்கையாளர்கள் கையில் கொடுத்துவிட்டது ட்ராய் அமைப்பு. நமக்கு தேவையானதை நாமே தேர்வு செய்யும் சுதந்திரம் என்று அதன் பெயர்.

நீங்கள் கூற இயலும், ரிமோட்டும் செட்டாப் பாக்ஸூம் வாடிக்கையாளர்கள்ள் கையில் தானே இருக்கிறது என்றௌ. ஆனால் அதன் கீகளை செட் செய்ததோ வேறொருவர். அது எப்படி நம்முடைய தேர்வாக இருக்க இயலும் ?

கேபிள் டிவியையும் உணவகத்தையும் ஒரு ஒப்பீடு செய்து பார்க்கலாம். உங்களால் உண்ண இயலும் என்ற அளவிற்கு சில உணவுப் பொருட்களை ஒரு தட்டில் வைத்து, அதற்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, அந்த உணவினை உணவகங்கள் விற்பனை செய்யலாம். அனைவரும் இதை வாங்கி உண்பார்கள். ஏன் என்றால் அனைவராலும் அதனை வாங்க இயலும். உண்ண இயலும். தனித்தனியான ஆர்டர்களில் பெறப்படும் பணத்தினை விட அதிக அளவில் நல்ல லாபத்தில் இந்த உணவுகள் விற்கப்படலாம்.

Advertisment
Advertisements

மற்றொன்றை யோசியுங்கள், ப்ரீ கான்ஃபிகர்ட் செய்து ஒரு பெரிய தாலி முழுவதும் உணவுகளை வைத்து உங்களுக்கு உண்ணா தரலாம். அதில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பதார்த்தங்களின் கூட்டு விலையை விட, இந்த தாலியின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும். இதனையும் பலர் விரும்பி வாங்கி உண்பது வழக்கம்.

ஆனால் நீங்கள் சாப்பிடும் இரண்டே இரண்டு உணவு பதார்த்தங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு தாலிக்கான கட்டணத்தை கேட்பது எவ்வகையில் சரிப்பட்டு வரும்.

ட்ராய் நிறுவனத்தின் புதிய கொள்கையானது ஒவ்வொரு சேனலுக்கும் தனிப்பட்ட கட்டணத்தை வசூலிக்க வழிவகை செய்கிறது. ஒவ்வொரு தனி சேனலுக்கும் ஒரு கட்டணம். இதை யார் தான் வேண்டாம் என மறுப்பார்கள். ஆனாலும் அந்த சேனலை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காக என்.எஃப்.சி. என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. அந்த கேரியரில் தான் தனிச்சேனல்கள், பொக்கேட் சேனல்கள் ஆகியவற்றை ப்ரோட்கேஸ்ட் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் யாருக்கு என்ன சேனல் தேவையோ அதனை பெற்றுக் கொள்ள இயலும். இந்த புதிய ஃப்ரேம் ஒர்க்கானது தேவையற்ற அனைத்துவிதமான லேயர்களையும் நீக்கிவிட்டு வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அதனை தருகிறது.

ஏன் இந்த மாற்றம் தேவை ? தற்போது ஏன் ?

பழைய உதாரணத்திற்கே செல்வோம். ஒரு உணவகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹோம் டெலிவரி என்ற ஒரு வகையுண்டு. வெகு காலமாக இது நடைமுறையில் இருக்கும் ஒன்று. ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு, நமக்கு தேவையான உணவகத்தில், நமக்கு பிடித்தமான உணவினை, நமக்கு கட்டுப்படியாகும் கட்டணத்தில் தேர்வு செய்து கொள்ள இயலும்.

இது ஃபுட் டெலிவரிக்காக மட்டும் இல்லை. ரெஸ்ட்ரானட் பிசினஸ்ஸையும் கூட அடுத்த லெவலிற்கு எடுத்து சென்றது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு என்ன தேவையோ அந்த உணவினை பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றாவாறே உணவுகளை தயாரிக்கும் உணவகங்களும் தற்போது உருவாகத் துவங்கிவிட்டது,

இதே டெக்னாலஜியில் தான் தற்போது கேபிள் டிவி ஆப்பரேட்டிங் செக்டார்களும் செயல்படத்துவங்கியுள்ளன. பாராளுமன்றம், கேபிள் டிவி சட்டம் 2012ல் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. மேலும் அனைத்து அனலாக் சேனல்களையும் டிஜிட்டலாக மாற்றக் கோரி உத்தரவினை பிறப்பித்தது.

அனைத்து சிக்னல்களும் என்கிரிப்ட் செய்யப்பட்டு, செட்-டாப்-பாக்ஸில் டீகிரிப்ட் செய்யப்படும். நான்கு தவணை மூலமாக மார்ச் 2017லேயே அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டனர்.

இதனால் தாங்கள் பார்க்கும் சேனல்கள் குறித்த வெளிப்படைத் தன்மையினை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள இயலும். தாங்கள் பார்க்கும் சேனல்கள் தொடர்பான முழுமையான கட்டுப்பாடுகளும் வாடிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது.

மேலும் படிக்க : சேனல் செலக்டர் அப்ளிகேசனை பயன்படுத்துவது எப்படி ?

Trai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: