/tamil-ie/media/media_files/uploads/2019/02/tv_reviews.jpg)
TRAI new rules impact
TRAIs New Rule for DTH Provider : இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் புதிய கேபிள் டிவி சட்டத்தினை பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து அமல்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற புதிய கேபிள் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யவும், விருப்பமற்ற சேனல்களை ரிமூவ் செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு முழு உரிமையையும் இந்த சட்டம் அளிக்கிறது.
TRAIs New Rule for DTH Provider - நூறு சேனல்களுக்கான அடிப்படைக் கட்டணம்
முதல் 100 சேனல்களுக்கு நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் என்ற 130 ரூபாய் அடிப்படைக் கட்டணத்தையும், 18% ஜி.எஸ்.டி கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் அடிப்படைக் கட்டணம் 153 ரூபாய் ஆகும். 100 சேனல்களுக்கு மேல் பார்க்கப்படும் முதல் 25 சேனல்களுக்கு 20 ரூபாய் கூடுதல் கட்டணம் வழங்கப்படும்.
எஸ்.டி. சேனல்கள் மற்றும் ஹெச்.டி சேனல்கள்
டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் டிடிஎச் சேவைகளில் ஸ்டேண்டர்ட் சேனல்கள் மற்றும் ஹை டெஃபனிசன் சேனல்கள் என இரண்டையும் வழங்குகிறது. ஒரு ஹெச்.டி சேனல்கள் இரண்டு எஸ்.டி சேனல்களாக கணக்கில் கொள்ளப்படுகிறது. தூர்தசன் சேனல்கள் அனைத்தும் இலவசமாக பார்க்கலாம். டி.டி.எச். சேவைகளான ஏர்டெல், டிஷ், டாட்டா ஸ்கை போன்ற கேபிள் ஆப்பரேட்டர்களின் இணையத்தில் வரிகள் என அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.