/tamil-ie/media/media_files/uploads/2020/02/Facebook-logo-bloomberg-759-1.jpg)
Twitter confirms Facebook account hacked : ட்விட்டர் தளத்தில் இயங்கி வரும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ”அவர் மைன்” என்ற ஹேக்கிங் குரூப் இந்த பக்கத்தை ஹேக் செய்தது மட்டுமின்றி அதில் “Hi, we are O u r M i n e. Well, even Facebook is hackable but at least their security better than Twitter (ஃபேஸ்புக்கையும் ஹேக் செய்ய முடியும். ஆனால் ட்விட்டரை காட்டிலும் ஃபேஸ்புக்கில் செக்யூரிட்டி அம்சங்கள் சிறப்பாக இருக்கிறது)” என ட்வீட் செய்திருந்தது.
இந்த ட்வீட்டிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் எந்த வித கருத்தினையும் பதிவு செய்யவில்லை. ஆனால் அந்த ட்வீட் உடனே அந்த பக்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அவர்மைன் என்ற குழு தொடர்ந்து ட்விட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தேசிய ஃபுட் பால் லீக் அணிகளின் கணக்குகளை ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ட்விட்டரின் சீஃப் எக்ஸ்க்யூட்டிவ் ஆஃபிசர் ஜேக் டோர்ஸீயின் கணக்கினை கடந்த ஆண்டு ஹேக் செய்தது இந்த குழு.
மேலும் படிக்க : 328 நாட்கள் விண்வெளியில் சாகசம்… பூமி திரும்பினார் க்றிஸ்டினா கோச்!
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம், ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது. மேலும் தேர்ட் பார்ட்டி மூலமாக இந்த கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.