Dual Display, 10GB RAM சிறப்பம்சங்களுடன் வெளியாகும் விவோவின் புதிய போன்

சீனாவில் இருக்கும் சாங்காய் நகரில் யூ+ ஃபேசன் ஆர்ட் செண்ட்டரில் டிசம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது

சீனாவில் இருக்கும் சாங்காய் நகரில் யூ+ ஃபேசன் ஆர்ட் செண்ட்டரில் டிசம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vivo Nex 2, Vivo Nex 2 specifications, Vivo Nex 2 Price

Vivo Nex 2

Vivo Nex 2 : விவோ நிறுவனத்தின் புதிய போன் டிசம்பர் 11ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. டீசர் மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசியத் துவங்கியுள்ளன. ப்ரோமசனல் இமேஜ் மீண்டும், இரட்டை டிஸ்பிளேவுடன் வெளியாவதை உறுதி செய்துள்ளது.

Advertisment

Vivo Nex 2 சிறப்பம்சங்கள்

விவோ நெக்ஸ் 2 சீனாவில் இருக்கும் சாங்காய் நகரில் யூ+ ஃபேசன் ஆர்ட் செண்ட்டரில் டிசம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது.  ஏற்கனவே சியோமியின் மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனும் 10 ஜிபி RAM உடன் தான் வெளியாக உள்ளது. அதே போல் ஓப்போவும் ஒரு மாடலை அறிவித்தது. ஆனால் இது நாள் வரை வெளியாகவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

விவோ நெக்ஸ் 2வும் 10 ஜிபி RAM கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் இண்டெர்நெல் ஸ்டோரேஜ் 128 ஜிபி ஆகும். மூன்று ரியர் கேமராவுடன் வெளியாக உள்ளது இந்த போன்.

Advertisment
Advertisements

இதற்கு முன்பு வெளியான விவோ நெக்ஸ் போனின் சிறப்பம்சங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு உள்ளது இந்த புதிய போன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே யோட்டாபோன், நுபியா எக்ஸ் போன்ற போன்கள் இரட்டை டிஸ்பிளேயுடன் வெளியாகியுள்ளதால் விவோவின் இந்த போன் முதல் இரட்டை டிஸ்பிளே போன் என்று கூறிவிட இயலாது.

மேலும் படிக்க : பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்திய முதல்  நெட்வொர்க் டெலிபோனி சேவை

Vivo Smartphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: